ஐ.சி.ஆர்.சியிடம் 25 புலிகளின் சடலங்கள் கையளிப்பு
மன்னாரில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 25 விடுதலைப்புலிகளின் சடலங்களை நேற்று நண்பகல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டிருந்த புலிகளின் சடலங்களை பொறுப்பேற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் அவற்றை புளியங்குளத்திற்கு கொண்டு சென்று விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கடும்மோதலின் போது கொல்லப்பட்ட 24விடுதலைப்புலிகளின் சடலங்களும் வவுனியா பாலமோட்டை நவ்வி பகுதியில் நடத்திய தேடுதலின் போது கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரது சடலத்தையும் இராணுவத்தினர் வவுனியா பொதுமருத்துவமனையில் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.