உயிரைக் குடித்த ‘போன் செக்ஸ்’

Read Time:2 Minute, 54 Second

முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடமிருந்து வந்த மிஸ்டு கால், ஒரு அப்பாவி இளைஞனின் உயிரையே குடித்துவிட்டது. இப்போதெல்லாம் மொபைல் போனிலேயே விபச்சாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் அரங்கேறத் துவங்கிவிட்டன. குறிப்பாக போன் செக்ஸ் தமிழகத்தின் கிராமங்கள் வரை பரவி விட்டது. முன்பின் தெரியாத பெண்கள் மொபைலில் முதலில் தொடர்பு கொள்வார்கள். பின்னர் தினசரி இது தொடரும். ஒரு கட்டத்தில் வக்கிரமாகவும் ஆபாசமாகவும் பேசுவதில் ஒருவித இன்பம் காண ஆரம்பிப்பார்கள். இதற்கு அந்த இளைஞன் அடிமையாகிவிட்டான் எனத் தெரிந்தால், சட்டென்று தொடர்பைத் துண்டித்து விடுவார்கள். சில நாட்கள் தவிக்க விட்டு பின் மீண்டும் ஆரம்பிப்பார்கள். அதற்குள், இந்த போன் பெண்ணுக்காக எதையும் செய்யத் தயாராகிவிடுவார் அந்த இளைஞர். பின்னர் அவரிடம் இருந்து பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதன் பின்னணியில் பெரும் கும்பலே உள்ளது. இப்படித்தான் நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழியை சேர்ந்த மகேஷூம் மாட்டிக் கொண்டு, உயிரை விட்டிருக்கிறார். மகேஷின் இவரது சொந்த ஊர் பாளையங்கோட்டை. காற்றாலையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகேஷின் மொபைல் போனில் ஒரு பெண் திடீர் என்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணுடன் மணிக்கணிக்கில் மகேஷ் போனிலேயே அரட்டை அடித்துள்ளார். அடுத்த வந்த நாட்களில் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மொபைல் பெண்ணின் டெக்னிக்கை அறியாத மகேஷ், அந்தப் பெண்ணை தன் காதலியாக நினைத்து மனமுடைந்து போனாராம். கடந்த 22ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்திருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சொந்தமான வானொன்றிலிருந்து 20 ரவைகள், கைகுண்டு மீட்பு
Next post ஐ.சி.ஆர்.சியிடம் 25 புலிகளின் சடலங்கள் கையளிப்பு