இந்தியா முகப்பு > செய்திகள் > இந்தியா ராஜஸ்தானில் விபத்தில் ஒருவர் பலி : லாரி மீது கார் மோதல்… பிரதமர் மனைவி காயம்!!
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென். இவர் நேற்று தனது உறவினர்கள் மற்றும் போலீசார் என 4 பேருடன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர்கள் காரில் சித்தூர் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் அதன் மீது கார் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் ஜசோதா பென்னின் உறவினர் பசந்த் பாய் மோடி (67) மற்றும் 4 பாதுகாப்பு போலீசாரும் படுகாயம் அடைந்தனர். ஜசோதா பென்னுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த பசந்த் பாய் மோடி சிகிச்சை பலனின்றி இறந்தார்.