160 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!!
சுமார் 160 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சாவுடன் மூன்று பேர் சிலாவத்துறை, சவரியபுரம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் வலய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அந்த கஞ்சாப் பொதிகளுடன் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்