பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப் !!

Read Time:1 Minute, 57 Second

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்தாண்டு பதவியேற்ற டிரம்ப் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது, பரிஸ் நகரில் நடந்த போர் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். பிரான்ஸ் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை ரசித்த டிரம்ப், தற்போது அமெரிக்காவிலும் அது போன்ற அணிவகுப்பை நடத்த விருப்பப்பட்டுள்ளார்.

பொதுவாகவே, ஏதாவது போரில் பங்கேற்று வெற்றி பெற்ற பின்னர் தலைநகர் வாஷிங்டனில் இராணுவ வீரர்கள் வெற்றி அணி வகுப்பை நடத்துவர்கள். சிவில் போர், ஈராக் உடனான போர் ஆகியவற்றுக்கு பின்னர் பிரம்மாண்ட அணிவகுப்பை வீரர்கள் நடத்தினர்.

இந்நிலையில், வீரர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தை பெருமைப்படுத்தும் விதமாக தலைநகரில் ஏன் இராணுவ அணிவகுப்பு நடத்தக்கூடாது? என பெண்டகன் தலைவரிடம் டிரம்ப் கேட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், முப்படை தளபதிகளிடமும் டிரம்ப் இது தொடர்பாக ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் பெண்டகன் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்பின் இந்த செயல்பாட்டை விமர்சித்துள்ள ஜனநாயகக்கட்சி “எச்சேத்திகார அரசுகள் செய்வது போன்ற செயல் இது” என விமர்சித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 160 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!!
Next post கடவுளே ஏன் இந்த விளையாட்டு? சோகத்தில் சமந்தா!!