விண்வெளியில் திருமணம்; ராக்கெட்டில் ஊர்வலம்: ஆசை காட்டுகிறது ஜப்பான் நிறுவனம்

Read Time:2 Minute, 30 Second

உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஜப்பான் நிறுவனம் ஒன்று. விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது அந்த நிறுவனம். விண்வெளி திருமணத்துக்குக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூ. 10 கோடி. விண்வெளியில் சிறிய விண்வெளி ஓடத்தில் இந்த திருமணம் இனிதே நடந்தேறும். மணமக்களுடன் அவர்களது உறவினர் அல்லது நண்பர்கள் 3 பேர் இந்த விண்வெளி திருமணத்தில் பங்கேற்கலாம். திருமணச் சடங்குகளில் பெரும்பாலானவற்றை பூமியில் முடித்துக்கொண்டு உச்சகட்டமாக மாலை மாற்றுவது அல்லது நம்ம ஊர்க்காரர்கள் என்றால் தாலி கட்டுவதை விண்வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். விண்வெளி திருமணத் திட்டத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் நிறுவனத்துடன் ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. விண்வெளிக்குச் செல்லும் மணமக்கள் அங்கிருந்து பூமிப் பந்தை பார்த்து ரசிக்க முடியும். புவியின் ஈர்ப்பு சக்தி இல்லா நிலையில் திருமணம் நடக்கும். இந்த நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்தது என்றாலும் சீனர்களும் அரபு நாட்டவரும் தான் இந்த விண்வெளி திருமணத்துக்குப் பதிவு செய்வார்கள் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. போகிற போக்கை பார்த்தால் இனி நிலவில்தான் தேனிலவு நடக்கும் என்று தெரிகிறது. விண்வெளி சுற்றுலா தற்போது பிரபலமடைந்து வருகிறது. அமெரிக்க தொழிலதிபர் டென்னிஸ் டிடூ ரஷிய விண்வெளி நிறுவனத்துக்கு ரூ.80 கோடி பணம் கொடுத்து விண்ணில் செல்ல டிக்கெட் வாங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post பாகிஸ்தானில் விடுவிக்கப்பட்ட இந்தியர் மீண்டும் சிறையில் அடைப்பு