By 5 March 2018 0 Comments

படம் தயாரிக்க மாட்டேன் : நித்யா மேனன்!!

தெலுங்கில் ஆவ் படத்தில் ஓரினச்சேர்க்கையாளர் வேடத்தில் நடித்திருக்கிறார், நித்யா மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எத்தனை கதைகள் கேட்டாலும், அதில் ஓரிரு கதைகளில் தான் என்னால் நடிக்க முடியும். வழக்கமான ஹீரோயின் வேடத்தை நான் விரும்புவதில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் என் கேரக்டரை டெவலப் செய்வதிலும், நான் பேசும் வசனம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் டைரக்டருடன் ஆலோசிப்பேன்.

காரணம், படம் இயக்குவதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. எனவே, சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறேன். எதிர்காலத்தில் படம் இயக்குவேனே தவிர, சொந்தப் படம் தயாரிக்க மாட்டேன்’ என்றார்.



Post a Comment

Protected by WP Anti Spam