2 விமானிகள் படுகாயம் விமானப்படை விமானம் விபத்து!!
ஒடிசாவின் மயூர்பன்ஜ் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த விமானிகள் இருவர் படுகாயமடைந்தனர். மேற்குவங்கத்தின் கலய்குண்டா விமானதளத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் ரக விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. விமானதளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் நடுவானில் தீப்பிடித்தது.
இதையடுத்து விமானத்தில் இருந்து 2 விமானிகள் குதித்து உயிர்தப்பினர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.