நவநாகரிக நகரங்கள்: முதல் இடம் நியூயார்க்; மும்பைக்கு 22வது இடம்

Read Time:1 Minute, 10 Second

நவநாகரிக நகரங்கள் வரிசையில் முதல் இடம் பெறுகிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மும்பைக்கு 22-வது இடமும் தில்லிக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகவே நவநாகரிக நகரங்கள் வரிசையில் நியூயார்க் முதலிடம் பெற்று வருகிறது. முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் வரும் இதர நகரங்கள்: ரோம், பாரிஸ், மிலன், லண்டன், லாஸ்ஏஞ்சலீஸ், சிட்னி, லாஸ் வேகாஸ், பெர்லின், டோக்கியோ ஆகியவை. கடந்த ஆண்டில் மும்பை 18-வது இடத்தை பெற்றது. தில்லி முதல்முறையாக முதல் 25 நவநாகரிக நகரங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது. துபை நகரம் 12 வது இடத்தை பிடித்துள்ளது. நவநாகரிக நகரங்கள் பற்றிய வருடாந்திர ஆய்வு நடத்தும் தி குளாபல் லாங்வேஜ் மானிடர் என்ற அமைப்பு இதை வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்ப நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் காத்திருப்பு
Next post நடிப்புக்கு முழுக்குப் போட்டு திருமதி கோபிகா அஜிலேஷாக திருமண வாழ்க்கைக்கு திரும்புகிறார் கோபிகா