14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த கும்பல் !!(உலக செய்தி)
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்து சிறுமியின் தந்தை உள்ளூர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தார்.
அவர்கள் விசாரணை நடத்தி பலாத்காரம் செய்த நபர்களுக்கு தலா 100 தோப்புக்கரணம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சரமாரியாக தாக்கினர். மேலும், அந்த சிறுமியை தீவைத்து எரித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கும்பலை தேடி வருகின்றனர்.
14 வயது சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.