சொத்திற்காக தம்பியை அடித்து கொன்ற அண்ணன்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 58 Second

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய் நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 42). இவரது தம்பி ஆரோக்கியசாமி (40). விவசாயிகளான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அருளானந்தம் மனைவி விக்டோரியா மேரி, ஆரோக்கியசாமி மனைவி லீமா ரோஸ்மேரி இடையேயும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சொத்து தகராறு தொடர்பாக பட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று அருளானந்தம், ஆரோக்கியசாமி இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருளானந்தம் கட்டையால் ஆரோக்கியசாமியை அடித்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஆரோக்கியசாமி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோக்கியசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுப்பற்றி பட்டுக்கோட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அருளானந்தம், அவரது மனைவி விக்டோரியா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரப்போறா நெல்லைப் போல… யார் இவ..!!(மகளிர் பக்கம்)
Next post ஆஸ்திரேலியா போகவே கூடாது என்பதற்கான 10 காரணங்கள்!! (வீடியோ)