இனி நியாயம் கிடைக்கும்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரப் பாடல்!!!

Read Time:2 Minute, 40 Second

ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் ’இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது.

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழுகட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மாநில முதல் மந்திரிகள் மற்றும் மாநில கட்சி தலைவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜக.வின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி ’இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடலை காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவெத் அக்தர் இயற்றியுள்ள இந்தப் பாடலுக்கு நிக்கில் அத்வானி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலின் சில வரிகளில் தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக சமூக ஒற்றுமையை சீர்குலைத்து, மதரீதியிலான வெறுப்புணர்வை தூண்டி விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷனில் பாஜக ஆட்சேபம் தெரிவித்திருந்தது. பின்னர், தேர்தல் கமிஷனின் தலையீட்டின்படி ஆட்சேபத்துக்குரிய அந்த வரிகள் நீக்கப்பட்டு, இந்த பிரசாரப் பாடலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இம்ரான்கானின் வீட்டுக்கு அருகே துப்பாக்கி குண்டுகள்!! (உலக செய்தி)
Next post இன்று திருப்பம் நிகழுமா? (கட்டுரை)