புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை!! (கட்டுரை)

Read Time:14 Minute, 31 Second

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை “மீண்டும் அச்சத்திற்குள் இலங்கை: புதிய ஆடையில் பழைய பேய்கள்’ (Old ghosts in new garb: Sri Lanka return to fear) என அந்த ஆட்சியை குறிப்பிட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட் டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுக்கப்படுவதை ஒட்டி இந்த அறிக்கையை மன்னிப்புச் சபையின் கொழும்பில் உள்ள தென்னாசிய அலுவலகம் வெளியிட்டுள்ளது.

புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை’ என்ற தலைப்பில் இலங்கை தொடர்பாக பிந்திய அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வரலாற்று ரீதியான குற்றங்களுக்கான நீதியை பெறுவதற்கான முயற்சிகளை நெரித்துத் தடுக்கும் அரசாங்கத்தின் போக்கை வன்மையாக எதிர்ப்பதோடு, அரசின் அப்போக்கு நீதி பெறுதலையும் தடைசெய்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

மறுப்புரைகள் (மாறுபாடான கருத்து நிலைப்பாடு) மீது இலங்கை அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுபிக்கப்பட்ட கடும் நடவடிக்கையானது சிவில் சமூக சுதந்திரத்தை வன்மையாக கட்டுப்படுத்துகின்றது.

அத்தோடு, சர்வதேச சட்டத்தின் கீழ், முரண்பாடு காலக்கட்டத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கான நீதியை பெறும் முயற்சிகளையும் தடைசெய்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபையால் இன்று வெளியிடப்பட்ட பிந்திய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

30 வருட ஆயுதப் போராட்டத்தில் நாட்டில் நடைபெற்ற குற்றங்களுக்கு எதிராக இடைக்கால நீதி செயல்முறைகளைத் தடைசெய்யவும் அக் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரை அடக்குவதற்கும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகளில் மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள், சட்டத்தரணிகள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அலுவலர்களை இலங்கை அரசாங்கம் எவ்வாறு இலக்கு வைத்தது என்பதை அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

“கடந்த வருடகாலத்தில், இலங்கை அரசாங்கம் நாட்டின் சிவில் பரப்பை தீவிரமாக மாற்றியமைத்துள்ளது.இது தற்போது, கருத்து வேறுபாடு/ மறுப்புரை தெரிவிக்கும் குரல்கள் நோக்கி அதிகரித்து வரும் விரோதம் மற்றும் சகிப்பற்ற தன்மையால் வரையறுக்கப்படுகின்றது,’ என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் பணிப்பாளர் டேவிட் க்ரிஃபித் கூறினார்.

“வெறுமனே, அதிகாரிகளை அதிருப்திபடுத்தும் செயல்களில் ஈடுபடுதல் அல்லது கருத்துக்களை தெரிவித்தல் போன்ற காரணங்களால், எல்லா மட்டங்களிலும் உள்ள மக்கள் அச்சுறுத்தப்பட்டு, மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். மறுப்புரைக்கு எதிரான பிரச்சாரத்தை இலங்கை அரசாங்கம் துண்டிக்க வேண்டும். அத்துடன், கருத்து

தெரிவிக்கும் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் மற்றும் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் ஆதாரமின்றி தன்னிச்சை தடுப்புக்காவலில் வைப்பதிலிருந்து சுதந்திரம் ஆகிய சர்வதேச சட்டத்தின் கீழுள்ள கடமைகளை மதிக்க வேண்டும்.

‘மாசி மாதம் 2020 இல் ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து அணுகப்பட்ட முரண்பாட்டுக்கால குற்றங்களுக்கான நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளில் விலகியதிலிருந்து, நீதியை அணுகுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறும் தன்மையை உறுதிப்படுத்தும் முயற்சிகளைத் தடைசெய்யும் நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுகின்றார்கள்.

22 மாசி மாதம் வரை 23 பங்குனி மாதம் கூடும்போது, கடந்த மாதம் மனித உரிமைகளுக்காக ஐ.நா. உயர் ஆணையாளரால் வெளியிடப்பட்ட, இலங்கை மீதான பாதகமான அறிக்கையில் உள்ள பரிந்துரைப்புகளை அமுல்ப்படுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா. மனித உரிமை சபைக்கு தெரிவிக்கின்றது.

“நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகளால் இலங்கையில் நலிந்து வரும் மனித உரிமைகளை சர்வதேச சமூகம் புறக்கணிக்கக் கூடாது. தண்டனையிலிருந்து விலக்களிக்கும் சுழற்சித் தொடரை முடிவிற்குக் கொண்டு வந்து, இலங்கை அரசாங்கத்தை முழுமையாக பொறுப்புக்கூற வைத்திருப்பதற்கு மனித உரிமை சபை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அத்துடன், சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் புதிய நீதி முறைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.’ என டேவிட் க்ரிஃபித் கூறினார்.

நீதி மற்றும் பொறுப்புக்கூறல்

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக பரிந்துரைப்பு செய்வதில் விசாரணையை மேற்கொள்ளுதல், ஆவணப்படுத்தல், வழக்குத்தொடுத்தல் அல்லது அறிக்கையிடுதல் போன்றவற்றில் பங்கு வகித்தோரை இலக்கு வைக்கும் செயல்வடிவத்தை சர்வதேச மன்னிப்புச் சபையின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இதில், குறைந்தபட்சம் 6 தடவைகள் வழக்கறிஞர்களை இலக்குவைத்த சம்பவங்கள் அடங்கும்.

யஹஜாஸ் ஹிஸ்புல்லா, சிறுபான்மையின உரிமைகளுக்கான பரிந்துரையாளர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தரணிக்கு எதிராக இலங்கையின் கடுமையான தீவிரவாதத்தை தடுக்கும் சட்டம் உட்பட ஏனைய சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒருவித

குற்றமிழைத்ததற்கான ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாமல் இவர் 10 மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக அமுலாகிய சட்டத்தரணி அசலா செனவிரத்ன, சமூக ஊடகம் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளால், வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் போன்றவற்றால் அச்சுறுத்தப்பட்டார்.

சர்வதேச சட்டத்திற்கு எதிராக புரிந்த குற்றங்களுக்கான நீதியை நாடும் குற்ற விசாரணையாளர்களும் கண்காணிப்பிற்கு உள்ளாகின்றார்கள். குற்ற விசாரணையின் முன் பணியாளர் பதவியிறக்கம் செய்யப்பட்டு பின்பு ஆதாரங்களை உருவாக்கிய வழக்கின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தற்போதும் அவர் சிறைக்காவலில் உள்ளதோடு, ஆயுதப்படையினர்களால் இழைக்கப்பட்ட துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விசாரணைகளை முன்னெடுத்ததன் காரணமாக எதிரீட்டு நடவடிக்கையாகப் பழிவாங்கப்படுகின்றார் என்று நம்புகின்றார்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய குற்றச் சாட்டுகள் பரவி வரும் நிலையில், யுத்தத்தின் இறுதி கட்டத்தில் தலைமையில் இருந்த இராணுவ தலைமை உறுப்பினர்களுக்கு புதிய நிர்வாகத்தின் கீழ் பதவி உயர்வு மற்றும் சிவில் வகிநிலைகள் உட்பட அதிகார வகிநிலைகள் வழங்கப்படுகின்றன. நியாயத்தை கோரும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது இது பயங்கரமான விளைவை கொண்டிருந்தது.

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டப்பூர்வமான திருத்தங்கள் ஆகியன, நீதியை பெறக்கூடிய நம்பகத்தன்மை உள்ள உள்ளூர் வழிமுறைகளை எவ்வாறு வலு குறைவடையச் செய்தது என்பதை இவ்அறிக்கை குறிப்பிடுகின்றது.

மேலும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள், எவ்வாறு மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கான பொறுப்புக்கூறலை மாற்றியமைக்க முயற்சிக்கின்றது என்பதையும் இவ் அறிக்கை குறிப்பிடுகின்றது.

குடியுரிமை இடம் மீதான தாக்குதல்
மறுப்புக்கூறலை தடுப்பதற்கு புதிய கருவிகளையும் செயல்முறைகளையும் அறிமுகப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் நேரத்தை வீணடிக்கவில்லை.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராகக் கரி பூசும் பிரச்சாரத்தை அரசு நபர்கள் முன்னெடுத்த அதேவேளையில் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய பின் ஊடகவியலாளர்கள் மரண அச்சுறுத்தல்கள் பெற்றதோடு புலனாய்வு மற்றும் விசாரணைக்களுக்கு அழைக்கப்பட்டனர்.

மனித உரிமை அரச சார்பற்ற அமைப்புகளின் அலுவலகங்களுக்கு அரசு பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை கடந்த பதினான்கு மாத காலமாக அதிகரித்து வருகின்றது. அக் காலக் கட்டத்தில் அத்தகைய 18 வருகைகளை சர்வதேச மன்னிப்புச் சபை பதிவு செய்துள்ளது. வருகையின் போது, அதிகரிகள் பதிவு விவரங்கள், ஊழியர்கள் மற்றும் நன்கொடையாளரின் வங்கி விவரங்கள் பற்றி விசாரித்தனர். சில ஊழியர்களின் தனிப்பட்ட வகிவிடத்திலும் அவ் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு (கு.அ.உ.ச.உ) சட்டம் உட்பட, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. முன்குறிப்பிடப்பட்ட சட்டமானது ரம்ஸி ரஸீக் அவர்களை கைதுசெய்து குற்றஞ்சாட்டப்படாத நிலையிலும் வழக்கறிஞ்சரை முறையே அணுகவிடாத நிலையிலும் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக தடுப்பில் வைத்திருக்க பயன்படுத்தப்பட்டது.

இவர் முகப்புத்தகத்தில் கொவிட் 19 ஆல் இவர்களின் கட்டாயத் தகனத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்தமைக்காக, பேனா மற்றும் விசைப் பலைகையை ஆயுதமாக பயன்படுத்தி கருத்தியல் போரட்டத்திற்கு அழைப்புவிட்டார் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளார்.

பின்னணி
22 ஆம் திகதி மாசி மாதம் தொடக்கம் 23 ஆம் திகதி பங்குனி மாதம் வரை மனித உரிமை சபை தனது 46ஆவது அமர்வில் கூடும். இதன் போது,

கனடா, ஜேர்மனி, மொன்டநீக்ரொ, வடக்கு மசதோனியா மற்றும் ஐக்கிய இரச்சியம் இலங்கை மீது தலைமைதாங்கும் தற்போதைய முதன்மை குழுவில் அடங்கும் நாடுகள் மனித உரிமைக்கான உயர் ஆணையாளர் அலுவலக அறிக்கையைத் பின்தொடரும் பிரகடனத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..? (வீடியோ)
Next post ஆபத்தானவரா ஃபேஸ்புக் முதலாளி! (வீடியோ)