விளம்பரம் வடிவமைத்து சம்பாதிக்கலாம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 56 Second

வீட்டில் இருந்தபடியே விரும்பிய நேரத்தில் வேலை செய்யலாம் என்ற வாசகத்துடன் கூடிய நோட்டீஸ்கள் ரயில் மற்றும் பஸ்களில் ஒட்டப்பட்டிருப்பதை காணலாம். அதில் வேலை தருபவர் பெயரோ முகவரியோ இருக்காது. நோட்டீசில் உள்ள செல்போனை தொடர்பு கொள்ளும் போது இனிமையாக பேசி, வேலையும் தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொள்வார். அதற்கு பின் வேலை காரணமாக தொடர்பு கொண்டால் அவரின் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கும்.

அவரும் மாயமாகி இருப்பார். இதற்கு விதிவிலக்காக திகழ்ந்து வருகிறார் சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்த புவனா சக்ரவர்த்தி. இவர் ‘பி பிரான்ட்’ என்ற பெயரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். தன் நிறுவனம் மூலம் பெண்கள் பலருக்கு வீட்டில் இருந்தபடியே வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறார். சென்னை மட்டும் இல்லாமல் திருச்சி, புனே என அவரது எல்லை பரந்து விரிந்துள்ளது.

இப்போதெல்லாம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப், கூகுள், டிவிட்டர் என எதை திறந்தாலும் நம் கண்ணில் ஆன்லைன் விளம்பரங்கள் தென்படுகின்றன. சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆன்லைன் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை எளிதாக எட்டுகின்றன. இதனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை இப்போது கொடிகட்டி பறக்கிறது. இந்த விளம்பரங்களை வடிவமைத்து தரும் பணியில் தான் ‘பி பிரான்ட்’ நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

`எங்க கல்லூரிக்கு வாங்க படிக்கலாம். படிச்சு முடிச்ச கையோடு ஃபாரின் பறக்கலாம்’ என கவர்ந்திழுக்கும் வாசகங்களை கொண்ட போஸ்டர்கள் நாம் அன்றாடம் சந்திக்கும் விளம்பரங்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து சம்மந்தப்பட்ட இணையதளங்களில், ஆன்லைன் மூலம் விளம்பரங்களை பார்க்க செய்ய தூண்டுகிறது இந்த நிறுவனம் தயாரிக்கும் விளம்பரங்கள்.

`உங்கள் இதயத்தில் குறைபாடா… நாங்கள் இருக்க பயம் ஏன்? என்கிறது மற்றொரு விளம்பரம். ‘வாங்க பாலி தீவுக்கு போகலாம் கோடையை உற்சாகமாக அனுபவிக்கலாம்’ என்கிறது மற்றொரு விளம்பரம். இது தவிர கார் மற்றும் டயர் நிறுவனங்களுக்கான ஆன்லைன் விளம்பரங்களையும் வடிவமைத்துள்ளனர்.

கல்வி நிறுவனம், மருத்துவமனை, வியாபார நிறுவனங்களுக்கான லோகோவையும் இவர்கள் வடிவமைத்து தருகிறார்கள். இவை அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என்பது தான் இவர்களின் ஹைலைட்டே. ஏற்கனவே போட்டோஷாப் மற்றும் கணினி துறையில் வேலைப் பார்த்து வேலையை விடுவித்த பெண்களுக்கு இவர்கள் வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார்கள்.

சென்னை, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ‘புட் ஸ்டிரீட்’ என்ற லோகோவை இவர்கள் தான் வடிவமைத்துள்ளார்களாம். இதில் விஷுவல் எடிட்டர், விளம்பர வாசகத்தை உருவாக்குபவர், பின்னணி குரல் கொடுப்பவர், புகைப்பட நிபுணர், கிராபிக்ஸ் வடிவமைப்பாளர் என பலர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

விளம்பரம் அளிக்கும் நிறுவனங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சில நொடிகளில் வீட்டில் இருந்தபடியே அதனை தயாரித்து தருகின்றனர் இந்த பெண்கள். இதற்காக ஒரு புராஜக்ட்டுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பெண்கள் சம்பளமாக பெறுகிறார்கள் என்கிறார் நிறுவனர் புவனா. இவர் சிறந்த ஆன்லைன் விளம்பரம் உருவாக்கியதற்காக விருதும் பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தையல் தொழில் தொடங்கலாம்… நிரந்தர வருமானம் பார்க்கலாம்!! (மருத்துவம்)
Next post பழைய புடவைகளுக்கு புதிய பளீச்!! (மகளிர் பக்கம்)