புலி உறுப்பினர்கள் 52பேர் சரண்! : சரணடைந்தவர்களின் 23பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்!

Read Time:1 Minute, 18 Second

பெருமளவில் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நேற்றையதினம் புலிகளின் 52 உறுப்பினர்கள் வளைஞர்மடம் பகுதியில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த மேற்படி புலி உறுப்பினர்களில் 23பேர் புலிகளிடம் பயிற்சிபெற்ற 13 வயதுக்கு 18 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. நேற்றையதினம் வளைஞர்மடம் படையினரால் முழுமையாக விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் சரணடைந்துள்ளனர்.புலிகளால் பயிற்சி வழங்கப்பட்ட சிறுவர் சிறுமியர் தப்பியோடுவதை இனம் கண்டுகொள்வதற்காக அவர்களின் ஆண்களுக்கு தலைமையை மொட்டையாகவும் பெண்களுக்கு தலைமுடியை கட்டையாகவும் வெட்டியுள்ளனர் என்றும் தங்களைப்போன்று மேலும்பலர் சரணடைவார்கள் என்றும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “புலி உறுப்பினர்கள் 52பேர் சரண்! : சரணடைந்தவர்களின் 23பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்!

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    புலம் பெயர் மக்கள் உதவுகிறார்களோ இல்லையோ சிறீலங்காவில் உள்ள சிங்கள மக்கள் உதவிகளை வழங்க தொடங்கி விட்டார்கள்.

    அனுராதபுரம் வைத்தியசாலையில் தாயை இழந்த ஒரு குழந்தை பசியில் பாலுக்காக அழுத போது பக்கத்தில் இருந்த ஒரு சிங்களப் பெண் ஓடிச் சென்று அந்தக் குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தன் குழந்தையோடு அணைத்து தாய்ப் பால் கொடுத்த அந்த சிங்களப் பெண்ணைப் பார்த்த போது தன்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை என கண்ணீர் மல்க ஒரு இராணுவ அதிகாரி சொன்னதை லக்பிம வேதனையோடு வன்னி மக்கள் நிலை குறித்து நடப்பதை எழுதியிருந்தது. இங்கே தமிழும் சிங்களமும் மறந்து மனிதம் தெரிகிறதே?

  2. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    எருமை ஏரோபிளேன் ஓட்டுது என்று புலி புதினத்திலோ அல்லது தமிழ்புலி நெட்டிலோ பார்த்தால் நம்புகிற விளக்குஎண்ணைகள் ஆக புலன்பெயர்ந்த தமிழர் இருக்கும் போது பீலா விடுவதும் பிலிம் காட்டி காசு வேண்டுவதும் புலி வாலுகளுக்கு வெகு இலகுவான் வேலை

  3. ஐயா சபாரட்ணம் அவர்களே!

    வெளிநாடுகளில் வாழும் புலம் பெயந்த தமிழர்கள் எல்லோரும் புலிகளின் பின்னால் செல்லும் விளக்கெண்ணெய்கள் என்று மதிப்பீடு செய்வது தவறு.
    வெறி பிடித்துத் கூத்தாடும் பெரும்பான்மை இளந்தறுதலைகளுக்கு மத்தியில், மனசாட்சியுள்ள சிறு பான்மையினரின் மனத் துடிப்பை வெளியே
    காட்ட முடியாது. உதாரணத்திற்கு, ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன்.
    ஜேர்மனியின் தலைநகரில், ஒருவர் புலிகளின் அடவாடித்தனங்களை பற்றியும் வன்னியில் புலிகளால் மக்கள் படும் அவலங்களைப் பற்றியும் வெளிப்படையாகப் ஒருத்தமிழ் கடையில் சிலருடன் விமர்சித்திருக்கின்றார். மறுநாள் விடியற்காலை (09.04.2009) 4 மணிக்கு, இலங்கையில் தீவுப்பகுதியைச் சேர்ந்த மூவர், மேற்படி விமர்சித்தவரின் வீட்டிற்குச்சென்று அவரைத் தாக்கி எச்சரித்துள்ளனர். புலிகளுக்கு தம் காதை அடகு வைத்துவிட்ட இந்த எடுபிடி குருடர்கள் திருந்தாத வரை, புலம் பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் சிலரின் உணர்ச்சிகள் தற்சமயம் அடக்கப்பட்டிருக்கின்றது . ஆயினும்,
    வன்னி மக்களின் இன்றைய நிலையை மனதில் கொண்டு , அவர்கள் பொருமையுடன் செயல்படுகிறார்கள் என்ற உண்மையையும் அறிந்து
    கொள்ளுங்கள்.

Leave a Reply

Previous post மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு கோருவது நியாயமற்றது
Next post ஜனாதிபதியுடனான இந்திய உயர்மட்டத்தினரின் சந்திப்பில் போர்நிறுத்தம் பற்றி பேசப்படவில்லை-ஜனாதிபதி ஆலோசகர்