பிரபாகரன் சுட்டுக் கொண்டு வரப்பட்டாரா? கொண்டு வரப்பட்டு சுடப்பட்டாரா? ஐயப்பாடுகளும், அதிருப்திகளும்.. நெளிவுகளும்… தெளிவுகளும்…!!! (“அதிரடி” இணையத்தில் வெளியானது)

Read Time:10 Minute, 12 Second

lttepiraba-bodyதமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப்பெரும் தலைவராகவும், தளராத மனங் கொண்டவராகவும், எத்தனையோ சோதனைகளையும், எத்தனையோ மனிதர்களையும் நேருக்கு நேராக சந்தித்தவராகவும், எத்தனையோ களநிலைகளைக் கண்டவராகவும் வாழ்ந்து, நின்று, வீழ்ந்து மரணித்துப் போன திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் இலங்கை நாட்டின் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியிருப்பதை எம்மால் உணர முடிந்துள்ளது. பிரபாகரனின் மரண ஒளிப்பதிவு வீடியோவே இலங்கையின் அனைத்து மக்களும் தவறாது பார்த்த ஒரு காணொளியாக திகழ்வதாக கணிப்புகள் கூறியிருக்கின்றன. 2009.05.19 அன்று (நேற்று) புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானும், கடற்புலித் தளபதி சூசையும் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் தப்பித்து சென்று கொண்டிருந்த வேளையில், படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்டதாகவும் அவரது உடலைக் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கையின் அனைத்து வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்திகளை அனல்பறக்க பரப்பிக் கொண்டிருந்தன. இதன் காரணமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளின் வீதிகளிலும், தெருக்களிலும் கோடிக்கணக்கான பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்டும், கூத்தும் கும்மாளங்களும் மேற்கொள்ளப்பட்டும் வெற்றிக் களிப்புக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டதை உணரக்கூடியதாக இருந்தது. அதேபோல் அந்த வெற்றியை பறைசாற்றும் முகமாக ஒருசில இடங்களில் சிங்கக் கொடிகளும், இன்னும் பல இடங்களில் பௌத்தக் கொடிகளும் ஏற்றப்பட்டதையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மை இளைஞர்கள் தெருக்களில் இறங்கி கூத்துக்களும், கும்மாளங்களும் என்று நாகரீகமாகவும், அநாகரீகமாகவும் ஆட்டம் போட்டதையும், சிலவேளைகளில் அவர்களிடமிருந்து இனரீதியான பாகுபாட்டு சந்தோஷங்கள் வெளிப்பட்டதையும் கூட எம்மால் உணர முடியுமாக இருந்தது. ஆக, இத்தனைக்கும் காரணம் ஒரு துப்பாக்கிச் சன்னம் மூலமாக மண்டையோடு சிதறச் செய்யப்பட்டு, விழித்த கண்ணும், ஏங்கிய எண்ணமுமாக மரணித்துப் போன புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உடலம்தான் என்றால் அது திண்ணமே. ஒரு ரணகளமான யுத்தக்களத்தில், ரவைகள் துளைக்காத உடம்போடு, தலையில் மட்டும் ஒரு துப்பாக்கி ரவை துளைத்திருக்க, எதிரிகளின் தலைவர் கொல்லப்பட முடியுமா? என்றால், அது நிச்சயமாக இல்லையென்றே பதில்வரும் வினாவாகும். அம்பியுலன்ஸ் வண்டியொன்றில் படுவேகத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்தவர் மீது தலையில் மட்டும் ஒரு துப்பாக்கி வேட்டுடன் கொல்லுதல் இயலுமான காரியமா? அதுவும் நடு நெற்றிப்பொட்டில் வைத்து கொல்லுதல் முடியுமா? முடியும் என்றால் படையினரை நோக்கியா தப்பிச் சென்று கொண்டிருந்தார் பிரபா நெற்றிப் பொட்டில் வைத்துக் கொல்லுவதற்கு!? இப்படியாக, பாதுகாப்புத் தரப்புக் கூறிய பிரபாவின் கொலைச் சம்பவம் எங்கும், எப்படியும் பொருந்துவதாகவே இல்லை. ஆக புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலை நிகழ்ந்தது எப்படி??!!.. இனிமேல் போராடுதல் முடியாது என்று உணர்ந்து கொண்ட பிரபாகரனும் அவரது உயர்நிலைத் தளபதிகள் ஐவருமாக மொத்தம் ஆறுபேர் கடந்த சனிக்கிழமை தினத்தன்று ஆயுதங்களைக் கைவிட்டு படையினரிடம் சரணடைந்திருக்கின்றனர். (பிரபாகரனின் சரித்திரம் முடிந்தது என்பதை சனிக்கிழமையே அதிரடிக்கு உறுதியான நம்பகரமான தகவலின் மூலம் தெரிய வந்தது) பிரபாகரனின் சரித்திரம் முடிந்தது என்பதை அன்றையதினம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தினால், அவர்கள் அத்தகவல்களை வெளியிடாது அவர் வரும்வரை காத்திருந்தனர்….

இத்தருணத்திலேயே நேற்றுமுன்தினம் ஜோர்தான் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பி, இலங்கை மண்ணை முத்தமிட்டு இலங்கையில் காலடி வைத்தார். அதன் பின்னர் தகவல்கள் வெளியிடப்படும் என்று எல்லோரும் காத்திருந்த வேளையிலேயே நேற்று பிரபாகரன் அம்பியுலன்ஸில் தப்பிச் சென்று கொண்டிருந்த வேளையில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறின. ஆனால் உண்மையில் நேற்று போர் நடைபெறவும் இல்லை, பிரபாகரன் தப்பிச் செல்லவுமில்லை, படையினர் தாக்குதல் நடத்திக் கொல்லவுமில்லை. நடந்தது சரணடைந்திருந்த புலிகளின் தலைவரையும், அவரது சகாக்களையும் மண்டைப்பொட்டில் குறி போட்டு கொன்றது ஒன்று தான்.
 
கடந்த 16ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியான செய்தியொன்றில் குறிப்பிடப் பட்டிருந்ததாவது, “சமாதான உடன்படிக்கை அமுலிலிருந்த காலப்பகுதியில் புலிகளினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் நான்குபேரும், இராணுவத்தினர் மூன்று பேருமாக ஏழுபேர், மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருந்த படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்பதாகும்.” இந்த அடிப்படையில் புலிகள் தாம் கைது செய்த சாதாரண நிலையிலான படையினரையே கொலை செய்யாது இத்தனை காலமும் தடுத்து வைத்திருந்துள்ள நிலையில், ஒரு இயக்கத்தின் தலைவரை, பல்வேறு வழக்குப் பதிவுகளுடன் தொடர்புடைய ஒருவரை, அதுவும் யுத்தத்தின் போது சரணடைந்த ஒருவரை கொல்வதென்பது ஒரு யுத்தக் குற்றமாக இருந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதும், பிரபாகரன் செய்த குற்றங்களின் காரணமாக அவருக்கெதிராக போடப்பட்டிருக்கின்ற வழக்குகளின் இறுதித்தீர்ப்பும் சாகும்வரை தூக்கில் போடுவதாகவே இருக்க முடியும் என்பதும் இங்கு மறுக்க முடியாத ஒன்றுதான்…
 
அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றின் போது, பிரபாகரனிற்கு மன்னிப்பு வழங்குவதென்பது என் அகராதியில் கிடையவே கிடையாது என்றும் அதை வழங்க இலங்கை ஜனாதிபதி ஒருவரினால் மட்டுமே முடியும் என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தார். ஆக இலங்கை ஜனாதிபதி ஜோர்தானில் இருந்து வந்ததும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலாக இந்த மன்னிப்பு குறித்த விவாத, வியூகங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியிலேயே பிரபாகரனின் நடுமண்டையில் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கின்றார் என்பது எமக்கு தெளிவாக புலனாகின்ற அதேவேளையில், சில காலங்களுக்கு முன்பு கோத்தபாய ராஜபக்ஷ மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் மயிரிழையில் சிறு இரத்தக் காயங்களுடன் உயிர் பிழைத்ததும், அதன் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன் சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவை கண்ணீர் மல்க கட்டியணைத்து அழுததும் ஞாபகத்திற்கு வருகின்ற போது, பிரபாகரனின் நடுமண்டையில் குறிவைத்துக் கொண்றதும், இவர்களின் அன்றைய பாசக் கட்டியணைப்பும் ஏதோ ஒரு வகையில் பொருந்துவதாகவே தோன்றுகின்றது..!!!!
-உண்மைவிளம்பி..-

ltteprababody

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

16 thoughts on “பிரபாகரன் சுட்டுக் கொண்டு வரப்பட்டாரா? கொண்டு வரப்பட்டு சுடப்பட்டாரா? ஐயப்பாடுகளும், அதிருப்திகளும்.. நெளிவுகளும்… தெளிவுகளும்…!!! (“அதிரடி” இணையத்தில் வெளியானது)

  1. Nalla katpanai. Neengal viraivil DHASAVATHARAM part 2 produce pannalam. Super Story and very weld screen play. Prabakaran surrander aavathukku mulla thandu illaatha “songi” Karuna illai. Thevai irunthirunthal avar manitha kundahe vedithu iruppar.

    Naan onru kedkiren… Prabakaran meendum vanthu maaveerar urai thanthaal… neengal and SL goverment “netti” poddil suddu saaveerkala????. Maanam kedde, nakki pilaikkire inthe jenmathodu valvathai vida saagalam.

  2. உடல் , ராணுவத்துக்கு கிடைக்காமல் செய்து இருக்க வேண்டும்….
    உடலை ராணுவம் எடுத்தது அவமானம் தான்…..

    பல களம் கண்ட, தந்திர குணம் கொண்ட ஒருவர் , தப்பாமல் இறுதி வரை கலமுனையில் நின்று மரணித்தது போற்றப்படவேண்டியது….

  3. ஐய உண்மையில் நடந்தது என்னவெண்டால் , தலைவர் சயனைட் அடித்து இறந்த பிறகு, உடலை கைப்பற்றிய ராணுவம் இறந்த உடலுக்கு சுட்டு தாம் சுட்டு இறந்ததாக கதை விடுகினம்… இது தான் உண்மை…..

    எப்படியோ… எத்தனை உயிர்கள் பலியாகி… கடைசியில் இந்த போராட்டம் இப்படி முடிந்தது வேதனை தான்…..

    இனியாவது மக்கள் நிம்மதியாக இருக்கட்டும்….

  4. People’s murder monkey Rajapakse family you need to find a little better body like Prabakaran.

  5. கற்பனை அருமையாகத்தான் உள்ளது ஆனால்
    உண்மையும் இல்லாமல் இல்லை.

    பிரபாவை சிங்களவன் கைகளில் சிக்க வைக்க பலர் கடைசி நேரத்தில் ஒன்று சேர்ந்து விட்டார்கள் எனப்து தான் உண்மை.

    வெளிநாட்டவர்களினது பங்கு இங்கே நிறையவே உண்டு! அத்தோடு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை கூட உண்டு!

    ஆனால் இதை முழுதும் அறிந்தவர் பிரபாகரன் மாத்திரமே
    ஆனால் அவர் வந்து கூறப்போவதில்லை!

  6. கடந்த 30 வருட காலமாக கட்டி வளர்த்து ஆகாயப்படை, தரைப்படை, கடற்படை அனைத்தையும் உருவாக்கி எதையும் சாதிக்க முடியாமல் மக்களையும் அழித்து தாங்களும் அழிந்துஇ மீண்டும் ஈழத்தை பிடித்து தரப்போகிறார்கள் என்பதை மக்கள் நம்புகிறார்கள் என்றால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

  7. தமிழினத்தினிடையே துரோகிகள் இருகும்வரை

    தமிழீழம் என்பது ஒரு நீண்ட பயணம். துரோகிகளின்

    முடிவு.. தமிழினத்தின் விடிவு!!

  8. தமிழ் ஈழம் என்பது நீண்ட பயணம் அல்ல… ஒரு சுகமான கனவு..
    புலிகளின் முடிவு தமிழினத்தின் விடிவு!! எண்டு நினைப்பவர் பலர் உண்டு….

  9. இப்ப தெரியுதில்லே… பிரபா செத்துட்டான்னு…

    அடங்குடா!

  10. This is a fantastic post, but I was wondering how do I suscribe to the RSS feed?

  11. வரலாற்றில் எத்தனையோ மன்னர்களையும் தலைவர்களையும் வீரர்களையும் பற்றிப் பெருமையாகப் படிக்கின்றோம். அவர்கள் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் தன்மதிப்பைக் காக்கத் தற்கொலை புரிந்து கொண்டிருநதாலும் அவர்களை இழிவாக எண்ணுவதில்லை. வீர மரணங்களையும் தாய்நாடு காத்து மடிந்த நிகழ்வுகளையும் வணக்கத்துடனே நினைவு கூர்கின்றோம். தொன்மங்களில் வரும் இராமன், கண்ணன் ஆகியோரையும் தற்கொலை புரிந்து கொண்டவர்கள் என்று இழிவாக எண்ணாமல் வணங்கி மகிழ்கிறோம். எனவே, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு வேளை கற்பனையாக இருந்தாலும் அவர் வீரமும் நாட்டு மக்கள் விடுதலைக்காக அவர் பாடுபட்ட திறமும் ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ்மானம் காக்க வாராது வந்த மாமணியாய் விளங்கும் செம்மாப்பும் என்றென்றும் நினைவில் கொண்டு போற்றத்தக்கனவே! கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடுவது களங்கமே! விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்; அப்பொழுது இக்கறை துடைக்கப்படும். தமிழ் ஈழம் வெல்க! தாய்மண் காக்க கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடுவது களங்கமே! விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்; அப்பொழுது இக்கறை துடைக்கப்படும். உலகெங்கிலும் உள்ளவர்கள் இதே நாளை தாய்மண் விடுதலை ஈகிகள் நாள் எனக் கொண்டாட வேண்டும். தமிழ் ஈழம் வெல்க! தாய்மண் காக்க
    புலிகளோ பிரபாகரனோ அழிக்கப்பட்டது இலங்கைஅரசுக்குக் கிடைத்த வெற்றியல்ல. தமிழ்மக்களுக்கு என்று சமவுரிமை அளிக்கப்படுகின்றதோ அன்றுதான் இலங்கைஅரசு வெற்றியைக் கொண்டாட முடியும். தற்போது பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அவ்வளவே. இதற்கெல்லாம் வெற்றிவிழாக் கொண்டாடுவது தேவையற்ற இனமுரண்பாடுகளையே வளர்க்கும். ஏற்கனவே குற்றப்பின்னணி உடையவர்களை தமிழ் அமைச்சர்களாக்கி தமிழ்மக்களின் முகத்தில் கரிபூசியாகிவிட்டது. புலிகளால் தமிழ்த்தலைவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆனால் கற்றறிந்த தமிழ் அறிஞர்களை நியமன எம்பியாக்கி அவர்களிற்கு அமைச்சர் பதவி வழங்கி தமிழர்களைக் கைளரவப்படுத்தியருக்கலாம். இதுவே காலங்காலமாக சிங்கள அரசுகளின் நடைமுறை. திருச்செல்வம், குமாரசூரியர், லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற தமிழ் கல்விமான்கள் நியமன எம்பிகளாகி அமைச்சர்களாக இருந்தனர். தமிழினத்தினிடையே துரோகிகள் இருகும்வரைதமிழீழம் என்பது ஒரு நீண்ட பயணம். துரோகிகளின்முடிவு.. தமிழினத்தின் விடிவு!!தற்போது ஈபிடிபியினர் போலவே கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சமூகசேவைகள் செய்த குற்றப்பின்னணி உடையவர்களை அமைச்சர்களாக்கி, இவர்கள்தான் தமிழர்களின் தலைவர்கள் என்று உலகிற்குக் காட்டப்படுகின்றது. இதில் வெற்றிவிழா வேறு…இந்த வெற்றி உங்களுக்கு சொந்தமானது இல்லை… இந்தியாவுக்கு சொந்தமானது… அதுவும் சோனியாவுக்கும், அதன் கட்சி காங்கிரஸ்க்கும் சொந்தமானது… ரொம்பவும் பீற்றி கொள்ளாதே… “இதை கொண்டாட இந்திய துணை இல்லாமல் வெற்றி பெற்றுக்கவேண்டும்…” ஆனால் உங்களால் முடியாது…அதுக்கு ஏன் இந்த கொண்டாட்டம்…ஒரு பொய்யை பல முறை கூறினால் அது உண்மையாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை வெளிவரும் போது உலக வரலாற்றில் மிகவும் மோசடியாக செய்யப்பட்ட பொய் இதுவாகத்தான் இருக்கும். உலகளவில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். காயம் பட்ட புலி சினத்துடன் இருந்தாலும் சிறிது காலம் மறைந்துதான் இருக்கும் நிர்ப்பந்தம். சீற்றத்துடன் வெளிப்படும் காலம் விரைவில் வரும்..பிரபாகரன் உயிரோடு வந்தால் “எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் உடலை பார்க்க வில்லை. உடலை கண்டுபிடித்தது பொன்சேகாதான்” என்று ராஜபக்சே சகோதரர்கள் பொன்சேகாவின் மீது பழி போட்டு தப்பி விடுவார்கள். பொன்சேகா திருப்பி இவர்கள் மீது குற்றம் சொல்வான். கடைசியில் இருவரும் சேர்ந்து இந்தியாவை கேனையானாக்கி விட்டார்கள்.

Leave a Reply

Previous post நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனர்: பாலித கொஹண
Next post இலங்கை தமிழ் எம்.பி பத்மநாபன் மதுரையில் மரணம்