லேக்ஹவுஸ் விழாவை எளியமுறையில் கொண்டாடி நிவாரணக் கிராமங்களில் அக்கறை காட்ட தீர்மானம்

Read Time:1 Minute, 18 Second

கொழும்பு, லேக்ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் நவராத்திரி விழாவை இம்முறை மிகவும் எளிய முறையில் கொண்டாடும் முகமாக நவராத்திரி பூஜையை மாத்திரம் நடத்துவதென அம்மன்றம் தீர்மானித்துள்ளது. இம்மன்றம் நவராத்திரியை முன்னிட்டு வருடாந்தம் நடத்தும் கட்டுரை, கோலப் போட்டிகளையும் பாட்டு, நடன கலைநிகழ்ச்சிகளையும் தவிர்த்து அந்நிதியைக் கொண்டு இடம்பெயர்ந்து வவுனியா நிவாரண கிராமங்களிலுள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கவுள்ளது. லேக்ஹவுஸ் இந்து மன்றத்தினர் வவுனியா நிவாரண கிராமங்களுக்கு சென்று இவற்றை வழங்கவுள்ளனர். இந்நிவாரணப் பொருட்கள் வவுனியா அரசஅதிபர் திருமதி பீ. எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நிவாரண கிராமங்களுக்கு கொண்டுசெல்லப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் லேக்ஹவுஸ் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகாம்களில் இருந்து 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட் வழங்கியது
Next post விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்க்க வேண்டும் -ஜெனரல் சரத்பொன்சேகா!