By 28 August 2009 3 Comments

பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மையை இலங்கைஅரசு நிராகரிப்பு

இலங்கை இராணுவ வீரர் ஒருவர் இரண்டுபேரை சுட்டுக்கொல்லும் காட்சி பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதை அடுத்து லண்டணிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது சேற்றுத்தரையில் பலர் விழுந்து கிடப்பதையும் கை, கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமான மனிதர் ஒருவரை தலையின் பின்பக்கத்தில் இராணுவ சீருடை அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதையும் வீடியோபடம் பிடிக்கப்பட்ட காட்சியை பிரிட்டிஷ் தொலைக்காட்சி காண்பித்துள்ளது. வீடியோ காட்சி முடிவில் இதுபோன்று இன்னுமொருவர் சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் ஜனநாயகத்திற்கான செய்தியாளர் என்றழைக்கப்படும் குழு ஒன்றிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்த வீடியோ காட்சியின் உண்மைத்தன்மையை தங்களால் அறிந்துக் கொள்ள முடியவில்லை என்று இக்காட்சியை காண்பித்த சனல் 4அலைவரிசை தெரிவித்துள்ளது. இராணுவ வீரர் ஒருவர் அவரது கமெராபோனை பயன்படுத்தி இந்த வீடியோ காட்சியை எடுத்துள்ளதாக அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிடுவதில் மட்டுமே ஈடுபட்டிருந்தார்கள் என்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழ் சமூகத்திற்கெதிராக செயற்பாடுகளில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என்று வன்மையாக மறுப்பு தெரிவித்து இலங்கை தூதரகம் சனல்4க்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கை  ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தார்கள் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆயுதப்படைகளுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக திரிவுபடுத்தப்பட்ட வீடியோ காட்சிகள் புகைப்படங்கள் ஆவணங்கள் ஆகியவற்றை பல ஊடக நிறுவனங்கள் பயன்படுத்தியதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும்; இவ்வாறான செயலை யார் செய்தாலும் அவர்கள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் மேலும் இவ்வாறான குழப்பநிலையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.3 Comments on "பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மையை இலங்கைஅரசு நிராகரிப்பு"

Trackback | Comments RSS Feed

 1. Shri & Mano says:

  துணுக்காய் வதை முகாமில் புலிகளின் பிடியில் இருந்த அத்தனை மாற்று இயக்க மாற்று கருத்து கொண்ட அனைவரும் கடந்த ஜனவரியில் துனுக்காயை விட்டு புலிகள் பின் வாங்கும் பொது சுட்டு கொல்லப்பட்டது அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம்
  புலிகள் தாடி வைப்பதில்லை எனவே வீடியோவில் கொல்லப்படுவது புலிகள் அல்ல.

  சம்பவம் நடந்த இடம் துணுக்காய். துணுக்காய் மல்லாவி வாசிகளுக்கு நன்கு தெரிந்த இடம்.

  கொலை செய்பவரின் தலைமயிர் அவர் இராணுவத்தை சேர்ந்தவரல்ல என்பதை தெளிவாகிறது..

  இரண்டாவதாக கொலை செய்யப்படுபவர் புளட்டை சேர்ந்த புலிகளால் பிடிக்கப்பட்டிருந்த பாரூக் என்பதை பாரூக்கை தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

  12.12.2005 அன்று சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாருக்) வவுனியாவிலிருந்து புலிகளால் கடத்திச்செல்லப்பட்டார். பாருக் மக்களுடன் பழகிய முறையாலும், மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து அந்த மக்களுக்காக உண்மையாக சேவையாற்றியவர் என்பதாலும் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வவுனியா திருநாவற்குளம் பகுதி மக்கள் ஊர்வலமாக வைரவபுளியங்குளத்தில் உள்ள யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழு அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் பாருக்கை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்

  புலன் பெயர்ந்த புலிப்பினாமிகளுக்கு முக்கியமாக மூன்று பிரச்சனை இருக்கிறது.

  ஒன்று புலிகளை விமர்சித்து எழுதுவதற்க்கு சிங்களவனிடம் எவ்வளவு வாங்கியிருப்பான்? நிச்சயமாக ரணிலிக்கு ஓட்டு விழக்கூடாது என்பதற்க்காக தலைவன் மகிந்தாவிடம் வாங்கிய அளவுக்கு அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது.

  இரண்டாவது எழுதியவரின் அம்மா, அப்பாக்களின் நடத்தையை ஆராய்வது, நிச்சயமாக விமர்சனங்களையே பொறுத்து கொள்ளமுடியாமல் மற்றவர்களின் பெற்றோர்களை கேவலப்படுத்தும் தரமற்றவர்களை ஈன்றவர்கள் அல்ல அவர்கள்,

  இவன் தமிழனா அல்லது சிங்களவனா? என்ற சந்தேகம், நிச்சயமாக தமிழில் கெட்டவார்த்தையை தவிர வேறு வார்த்தைகளை அறியாத தமிழர்கள் அல்ல அவர்கள்.

 2. Shri & Mano says:

  இலங்கையரசு இன்றும் இறைமையுள்ள அரசு!.

  புலிகள் அப்படியல்ல!!

  புலிகள் சொந்த மக்களையே பலி கொடுத்து பலி எடுத்து பணம் சேர்த்தவர்கள்!!!

  புலிகள் சர்வதேசிய ரீதியில் பயங்கரவாதிகள் என்று பட்டம் எடுத்தவர்கள்!!!

 3. நக்கீரன் says:

  வேதனைக்குரிய வீடியோ..
  கொல்லப்படுவது மாற்று இயக்கத்தினர் என்றும் கொலை செய்வது புலிகள் என்றும் இந்த வீடியோ வை பார்க்கும் போது அப்பட்டமாக தெரிகிறது..

  Shri & மனோ உடைய கருத்து மிகத்தெளிவாக உள்ளது….

Post a Comment

Protected by WP Anti Spam