புளொட்டின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவுக்கு புளொட் கண்ணீர் அஞ்சலி!!

Read Time:3 Minute, 9 Second

plotepirapaபுளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளரான யாழ். வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த இராஜமனோகரன் பிரபாகரன் நேற்று முன்தினம் (30.10.2009) பிரான்ஸ்சில் அகால மரணமானார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். மானிப்பாயை பிறப்பிடமாகவும், ருயி மெகுல், பென்டின், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராஜமனோகரன் பிரபாகரன், இராஜமனோகரன் பரமேஸ்வரி (இந்தியா) தம்பதிகளின் புதல்வரும், முரளிதரன் (பிரான்ஸ்), கிருபாகரன் (இந்தியா) ஆகியோரின் சகோதரருமாவார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரான இவர், 1984, 85களில் புளொட் அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். 1987 இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பின்னர் வெளிநாடு சென்றிருந்த அவர், கழகத்தின் பணியில் சுவிஸ்கிளை முன்னெடுத்து வந்த வேலைத்திட்டங்களில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்தார். பின்னர் பிரான்ஸில் வசித்துவந்த அவர், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளராக மரணிக்கும் வரையில் கடமையாற்றினார். வெளிநாட்டில் வசிக்கும் நிலையிலும் தமிழ் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கழகம் முன்னெடுத்த பணிகளில் பல்வேறு சவால்களையும், இடர்களையும் சந்தித்தபோதிலும் மனந்தளராது எமது கட்சியைப் பலப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். புலம்பெயர் நாடுகளில் உள்ள கழக உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பினையும் ஏற்று அதனை செவ்வனே செய்து வந்ததுடன், யுத்தம் காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து, அம்மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கான வேலைத்திட்டங்களிலும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டார். அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் பெற்றோர்;, சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரோடும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு, எமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.
-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரேமப்பிரியா தான் வேண்டும் – விவேக்கின் அடம்!
Next post முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் சாத்தியம்