பொன்சேகாவின் பாராளுமன்ற பிரவேசத்திற்கு தடையில்லை -எதிர்கட்சி தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Read Time:1 Minute, 28 Second

பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர் என்ற வகையில் ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு எவ்விதமான தடையும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற திடீர் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணை நிறைவடைந்து நீதிமன்றின் தீர்மானம் கிடைத்ததன் பின்னர் இராணுவத்தின் பொறுப்பிலிருந்தாலும் அவர் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு தடையிருக்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அத்துடன் இந்த சந்திப்பில் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளவிருக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக நம்பகரமான வட்டாடங்களிலிருந்து தெரியவருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்னல் தாக்கம் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் -வளிமண்டலவியம் திணைக்களம்
Next post கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி