ஜெயந்தனைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய EPDP செல்லக்கிளி என்ற தீபன் பொலிசாரால் கைது!!

Read Time:4 Minute, 4 Second

கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10மணியளவில் வவுனியா பொது மருத்துமனைக்கு மருந்தெடுக்கச் சென்ற நிலையில் தம்பிராசா ஜெயந்தன் என்பவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனவும் இவரை விடுவிப்பதற்காக அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆயுதக்குழுவின் உறுப்பினர் தான் எனத் தெரிவித்த தீபன் என்பவர் உறவினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேரம் பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த பணப் பேரம் பேசலை அடிப்படையாகக் கொண்டு பணத்தை வழங்குவதாக கூறி சிவில் உடையில் சென்ற பொலிசார் செல்லக்கிளி என்ற தீபனை வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ஈ.பீ.டீ.பீ முகாமில் வைத்து கைது செய்தனர். அத்துடன் கடத்தப்பட்ட தம்பிராசா ஜெயந்தனையும் பொலிசார் மீட்டனர்.

இவர் வழங்கிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு ஈ.பீ.டீ.பீயின் தற்போதய மன்னார் மாவட்ட பொறுப்பாளரர் லிங்கேசை பொலிசார் தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் வவுனியா ஈ.பீ.டீ.பீ முகாமில் முக்கியஸ்த்தராக இருந்த லிங்கேஸ் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற கடந்த 24 ஆம் திகதி வவுனியாவிலேயே இருந்து இந்த கடத்தலுக்கு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. இவரே வன்னியில் இருந்து செல்வம் என்ற பெயரில் அவர்களின் வானொலியிலும் செய்தியாளராக குரல் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லிங்கேஸ் அல்லது செல்வம் என்ற இந்த முக்கியஸ்த்தரின் குழுவில் பிரதானியாக இயங்கும் செல்லக்கிழி என்ற தீபனின் வீடு ஈரப்பெரியகுளத்தில் யோசப் முகாமிற்கு அருகாமையில் உள்ள தம்ரோ தளபாடக் கடைக்கு அருகாமையில் உள்ளது.

இலங்கைப் புலனாய்வுப் பிரிவு அமைப்புகள் குறிப்பாக ரி.ஐ.டீயுடன் இணைந்தும் வேலை செய்த இவர் பல வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடையவர் எனக் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லங்கேசின் குழுவில் தீபனின் மைத்துணரான சுரேஸ், வட்டக்கச்சி யோகன், நந்தினி முதலானோர் இயங்குவதாகவும் இவர்கள் இலங்கைப் புலனாய்வு அமைப்பான ரீ.ஐ.டீயுடனும் இணைந்து பணியாற்றுவதாகவும் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த சில வருடங்களாக வவுனியாவில் பெறப்பட்ட பல கப்பப் பணம் ஈரப்பெரியகுளத்திற்கு அண்மையில் உள்ள ஆலையம் அல்லது கடைகளிலேயே கைமாறப்பட்டதாக பணத்தை கப்பமாக செலுத்தியவர்கள் பலதடவைகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பொலிசாரால் கைதான செல்லக்கிழி என்ற தீபன் தமது உறுப்பினர் அல்ல எனவும் தம்மிடம் பாதுகாப்பு கேட்டு காவற்துறையினர் வருவதற்கு சற்று முன்னரே தம்மிடம் வந்ததாக ஈ.பீ.டீ.பீயின் வவுனியா செயலகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெதர்லாந்தில் விடுதலைப்புலி சந்தேகநபர்கள் கைது
Next post துப்பாக்கியுடன் ஒபாமாவை சந்திக்க முயன்றவர் கைது