20வருடங்களின் பின் யாழ் முல்லைத்தீவு பஸ்சேவை

Read Time:1 Minute, 59 Second

20வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ்சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஈடுபடுத்தப்படவுள்ளது இதனை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் கணபதிபிள்ளை கணேசபிள்ளை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ்டிப்போ யுத்தசூழ்நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது எனினும் தற்போது புதிய பஸ் நிலையதரிப்பிடம் அமைக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் முல்லைத்தீவுக்கான நேரடி பஸ்சேவை இடம்பெறும் இதேவேளை பருத்தித்துறைக்கும் கொழும்புக்குமான நேரடி பஸ்சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாற்றம் செய்யப்படும் பருத்திதுறை கொழும்பு பஸ்சேவை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கம் பாதுகாப்பு படையினருக்குமே அதிகமாக பயன்படுகிறது இச்சேவை பகல்வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது எனவே மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது பலாலி தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ்சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜீ.எஸ்.பி.சலுகை நீடிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இலங்கை குழு ஐரோப்பா விஜயம்
Next post அனுஷ பெல்பிட்டவுக்கு பிரியாவிடை