‘காதலி’ நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

Read Time:3 Minute, 13 Second

பிரபல மலையாள – தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து ‘சிறப்பித்தார்’ பிரபு தேவா. சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கிய பிரபு தேவா, ஒரு கையால் நயன்தாராவை அணைத்தபடி மண்டபத்துக்கு வந்தார். மேடைக்கு சென்று மணமக்களை ஜோடியாகவே வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இதனால் புதுமண ஜோடியை விட்டுவிட்டு இந்த காதல் ஜோடியைப் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர்… (மேலும் புதிய படங்கள்)

நயன்தாராவை என் கணவரோடு பார்த்தால், பார்த்த இடத்திலேயே உதைப்பேன் என்று முன்பு பிரபு தேவா மனைவி ரம்லத் கூறியிருந்தார். இதனால் பயந்து போயிருந்த நயன்தாரா, பிரபுதேவாவை ரகசியமாக சந்தித்து வந்ததாகக் கூறப்பட்டது.

சில மாதங்களாக விமான நிலையம், ஹோட்டல்களுக்கு தனித்தனியாக வந்து பின்னர் ஜோடியாகிக் கொள்வதுதான் இவர்களின் பாணியாக இருந்தது. குறிப்பாக விமான நிலையங்களில் தெரிந்தவர்கள் கண்ணில் படாமலிருக்க தனித்தனியாக இருவரும் ஓடியதெல்லாம் நடந்துள்ளது.

ஆனால் இப்போது அந்த கட்டத்தைத் தாண்டி, நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி போலவே ஜோடியாக வருகிறார்கள் இருவரும்.

ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர்.

இதற்கிடையே தன் மனைவியை பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா, பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு நயன்தாரா, பிரபுதேவா சுற்றுலா சென்று வந்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். அதாவது இதுவரை கள்ளத் தனமாக வைத்திருந்த காதலை இப்போது வெளிப்படையாகவே வளர்க்க ஆரம்பித்து விட்டனராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறீ ரெலோ உறுப்பினர் எரிகாயங்களுடன் உயிருடன் மீட்பு
Next post கிளிநொச்சி உபமின் நிலையத்தின் புனரமைப்புப் பணி