தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்ட பரிந்துரைகள் டிசம்பர் மாதம் முன்வைக்கப்படும்‐சிவாஜிலிங்கம்..!

Read Time:2 Minute, 18 Second

தேசிய இனப்பிரச்சினைக்கான தமிழ் அரசியல் கட்சிகளின்   தீர்வுத் திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் முன்வைக்கப்படும்  தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் பத்து தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்ற போதிலும், இதில் ஒரு கட்சியே பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார் எனக் குறிப்பிடப்படுகிறது. பாராளுமன்றில் 13 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இதுவரையில் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் சனிக்கிழமை மீளவும் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கூடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் பத்து சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்திப்புக்களில் சாதமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28 அல்லது 29ம் திகதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடன பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும், கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்ட பரிந்துரைகள் டிசம்பர் மாதம் முன்வைக்கப்படும்‐சிவாஜிலிங்கம்..!

  1. எம்.கே. சிவாஜிலிங்கம் என்பவர் அரசியலில் இருக்கிறாரே? வியப்பாக இருக்கிறதே? தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம். அதன் தலைவர் சிறீகாந்தா. மெத்த நல்லது. ஆனால் அதன் செயல்குழுவில் எத்தனை பேர்? பொதுக்குழுவில் எத்தனை பேர்? மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசுவோர் முதலில் தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூல மந்திரங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டால் மட்டுமே ததேகூ பேச்சுவார்த்தை சாத்தியம். தமிழினத்தை சில்லறையாகவும் மொத்தமாகவும் சிங்களவனுக்கு கூறு போட்டு விற்கும் டக்லஸ் தேவானந்தா இதற்கு சம்மதமா? சிவாஜிலிங்கம் கொஞ்சம் கேட்டுச் சொல்வாரா?

Leave a Reply

Previous post வடக்கில் தமிழ் மக்களினால் புதைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தினூடாக உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது‐ஜெனரல் உபய மெதவல..!
Next post புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததை இந்திய அரசு முதற்தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளது..!