அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை..!

Read Time:4 Minute, 43 Second
உலக சரித்திரத்தில் மறக்க முடியாத மாமன்னன் அலெக்சாண்டர். சிறுவனாக இருந்தபோதே அலெக்சுக்கு தான் ஒரு பேரரசன் என்ற எண்ணமே மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. யுத்தக்குதிரை ஒன்று யாருக்கும் அடங்காமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது. அப்போது அலெக்ஸ் களத்தில் இறங்கினார். அவரது தந்தையும், மன்னருமான பிலிப்சுக்கு பெரும் அதிர்ச்சி. ‘அலெக்சாண்டர், உன்னால் முடியாது, போர் வீரர்களாலேயே முடியவில்லை’ என்றார். ‘முடியும் அரசே, அப்படி முடியவில்லையென்றால், 13 டேலண்ட்ஸ் பணத்தை உழைத்து உங்களுக்கு கட்டி விடுகிறேன்’ என்றார். பின்னர், குதிரையை நிதானமாக பார்த்தார். அதை நிழலான இடத்திற்கு அழைத்து சென்றார். குதிரை மிரட்சி அடங்கி அமைதியாக மாறியது. சூரிய ஒளியில் தன் நிழலை பார்த்தே குதிரை மிரண்டு அந்த அளவிற்கு போக்கு காட்டியிருந்திருக்கிறது. இதை புரிந்து-கொண்ட அலெக்ஸ் திறமையாக கையாண்டு குதிரையை வழிக்கு கொண்டு வந்தார்.  குதிரையின் அழகும் திடமும் அலெக்சுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனி இது என் குதிரை என்று சொல்லி அதற்கு ‘புகிபேல்ஸ்’ என்று பெயர் வைத்தார். குதிரையில் ஏறி மைதானத்தை சுற்றிச்சுற்றி வந்தார். அன்று தொடங்கி அந்தக் குதிரை அலெக்சாண்டருடன் பல தேசங்களை கடந்து பயணம் செய்திருக்கிறது.  வாலிப வயதில் எல்லா ஆண்களுக்குமே பெண்கள் மீது காதல் வரும். ஆனால் அலெக்சாண்டருக்கு பூமி மீது தான் காதல் இருந்தது. அதேவேளையில் அலெக்சாண்டரின் தந்தை பிலிப்ஸ் இரண்டாம் கிளியோபாட்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களில் அரண்மனையில் ஒரு விருந்து நடந்தது. அப்போது கிளியோபாட்ரா கருவுற்றிருந்தார். விருந்தின்போது கிளியோபாட்ராவின் தந்தை ‘உண்மையாக மாசிடோனியாவை ஆளப்போகிறவன் பிறக்கப்போகிறான்’ என்றார். இதில் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர் கொதிக்கும் சூப்பை எடுத்து கிளியோபாட்ராவின் தந்தையின் முகத்தில் வீசினார். அன்று இரவே தந்தை பிலிப்சை கொலை செய்துவிட்டு அலெக்சாண்டர் மாசிடோனியாவின் அரியணையில் ஏறினார்.  அடுத்தடுத்து போர்கள், நிலங்கள் என அலெக்சாண்டரின் வாழ்க்கை சென்றது. பல நாடுகள் அவர் வசமானது. 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் போரஸ் மன்னனுடன் அலெக்ஸ் யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது குதிரை புகிபேல்ஸ் இறந்துவிட்டது. பூமி ஆசையில் தனது தந்தையையே கொன்ற மன்னனால், தனது குதிரையின் மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை. ஒருவாரம் குளமான கண்களுடன் போர்முனையில் நின்றிருந்தான் அந்த மாவீரன். தனது வாழ்வில் மிகப்பெரிய துக்கமாக தனது குதிரை இறந்ததைத்தான் அலெக்சாண்டர் குறிப்பிடுகிறார். குதிரை இறந்ததுமே, அலெக்சாண்டருக்கு சோர்வு ஏற்பட்டு விடுகிறது. நாடுபிடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தாய் நாடு திரும்ப முடிவு செய்கிறார். கடைசியாக வென்ற இந்தியாவை கூட போரஸ் மன்னனிடமே திருப்பிக்கொடுத்துவிட்டார். ஒரு மிகப்பெரிய வீரனின் வாழ்வை குதிரையின் மரணம் திசை திருப்பி விட்டது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்..!
Next post கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மடத்திலிருந்து வெளியேறுவதற்கு இராணுவத்தினர் மறுப்பு..!