பிரதம நீதியரசரின் ரீட் மனு 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Read Time:1 Minute, 34 Second


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனுவை ஜனவரி 15ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த ரீட் மனு இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு ஒத்தி வைத்தது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரை நீதின்மன்றத்தில் இன்று ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுவொன்று நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரின் ரீட் மனுவை செல்லுப்படியற்றதாக்க வேண்டும் என கோரியே இந்த இடையீட்டு மனுவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்க சம்மேளனம் தாக்கல் செய்திருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 22 இணைய தளங்கள் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன
Next post வவுனியா குளத்தில் நீராடிய 16வயது மாணவன் பலி