இன்றைய ராசிபலன்கள்:17.01.2013

Read Time:8 Minute, 47 Second

Raasipalan-002
மேஷம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வாகனத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப்பற்றாகுறை விலகும். மனதிற்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்து வீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

மிதுனம்
நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப் படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

கடகம்
இன்றைய தினம் சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

சிம்மம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

கன்னி
துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாயாரின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

துலாம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். மாணவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

விருச்சிகம்
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக அமையும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

தனுசு
ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். கன்னிப்பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பார்கள். அரசாங்க வேலைகளிலிருந்து வந்த தடைகள் நீங்கும். விருந்தினர்களின் வருகையுண்டு. அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மகரம்
மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். கன்னிப்பெண்களுக்கு காதல் கைகூடும். வயிற்றுவலி, கனவுத்தொல்லை நீங்கும். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கும்பம்
இன்றைய தினம் அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மாணவர்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

மீனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் மேர்வினை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்
Next post மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து “பாய் பிரண்டை“ கொன்ற பெண்!