முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் மீண்டும் இன்று ஆஜராகியுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக ஷிராணி பண்டாரநாயக்கமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த 18ம் திகதி முதன்முறையாக அவ்வாணைக்குழுவின் முன் ஷிராணி ஆஜராகியிருந்தார். இதேவேளை, ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.