அமெரிக்காவை மீண்டும் மிரட்டும் புயல்

Read Time:2 Minute, 5 Second

usa-flag1.gifஅமெரிக்காவில் கடந்த ஆண்டு `ரீட்டா’, `காத்ரீனா’ என பலவேறு பெயர்களில் அடுத்தடுத்து புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி யது. இப்போது அட்லாண்டிக் கடலில் `ஆல்பர்ட்டோ’ என்ற புதிய புயல் உருவாகி உள்ளது.
இந்த புயல் கிïபா நாட்டை கடுமையாக தாக்கியது. புயலுக்குப்பின் அங்கு பலத்த மழை பொழிகிறது. 50 செ.மீ. அளவுக்கு அங்கு மழை கொட்டியது.

இப்போது இந்த ஆல்பர்ட்டோ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நோக்கி வேகமாக நகர்ந்தது. இதனால் புளோரிடா மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி மாகாண கவர்னர் ஜெப்புஷ் உத்தரவிட்டு இருக்கிறார்.

இன்னும் 24 மணி நேரத்தில் புளோரிடாவை புயல் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் கொந்தளிப்பு ஏற்படும் ராட்சத அலைகள் உருவாகி கடல்நீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாயமும் உள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு புயல் சீசன் அடுத்த மாதம்தான் வழக்கமாக தொடங்கும் ஆனால் ஆல்பர்ட்டோ புயல் முன்கூட்டியே வேண்டாத விருந்தாளியாக வந்துவிட்டது. அங்கு புயல் சீசன் நவம்பர் மாதம் வரை நீடிக்கும். கடந்த ஆண்டு அமெரிக்காவில் 28 தடவை புயல் தாக்கியது.

ஆல்பர்ட்டோ புயல் அபாயத்தை தொடர்ந்து புளோரிடா மாநிலத்தில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 16-ந் தேதி நடக்கும் இலங்கை தமிழர்கள் ஆதரவு போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்பு
Next post இந்தோனேசிய முன்னாள் அதிபர் மீதான ஊழல் வழக்கை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் ஆணை