புல்மோட்டையில் கணவன் மனைவி வெட்டிப் படுகொலை
புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சூரியபண்டார(39) மற்றும் எஸ்.அனுரிகா(36) என்ற கணவன் மற்றும் மனைவியின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரினது உடலிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரினாலேயே கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த பெண் தற்போது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை புல்மோட்டைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.