மலவாயிலில் வைத்து போதைப்பொருள் கடத்தல், இருவர் கைது
பல இலட்சம் ரூபா பெருமதியான ஹெரோயின் போதை பொருட்களுடன் இருவரை நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் குற்ற புலனாய்வு பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். ஹட்டன் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கினிகத்தேனையில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 25 பைக்கற்று ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதை இவர்கள் மலவாயிலில் மறைத்து கொண்டுவந்தாக தெரிவிக்கும் பொலிஸார் இவர்கள் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இதன் ஒரு பைக்கற்றின் பெறுமதி சுமார் 15,000.00 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.