வாரியப்பொலவில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு
குருநாகல் மாவட்டம் வாரியப்பொல, கஹகொல்ல பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதலின்போது இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒன்றரை வயது குழந்தை மற்றும் 29 வயதான இளம் தாய் ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.