அம்புலன்ஸ் சாரதியைக் காப்பாற்றிய நோயாளி

Read Time:1 Minute, 39 Second

accid.ambulance-bus-crashமாரடைப்பால் துடித்த அம்புலன்ஸ் சார­தியை அந்த வாகனத்தில் பயணித்த புற்று நோயாளி காப்பாற்றியுள்ள சம்­பவம் பிரான்­ஸில் இடம்­பெற்றுள்­ள­து.

பிரான்ஸ் வடக்கு பகுதியிலுள்ள பெர்க் சர் மெர் பகுதியைச் சேர்ந்த புற்றுநோயாளி கிறிஸ்டியன் நயத் (60). புற்றுநோய் முற்றி விட்டதால் கடந்தவாரம், லென்ஸ் என்ற பகுதியிலுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

திடீரென அம்புலன்ஸை சார­தி மார்பு வலியால் துடித்தார். இதைக் கண்ட புற்று நோயாளியான நயத், வண்டியை ஓரம் நிறுத்தச் சொல்லி, சார­தி­யிடமிருந்து வாகனத்தின் சாவியை பெற்று, அம்புலன்ஸ்சை செலுத்தி லில்லி என்ற பகுதியிலுள்ள வைத்தி­ய­­சா­லையின் அவசர பிரிவில் சேர்த்துள்ளார்.

அம்புலன்ஸ் சா­­ர­திக்­கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோயாளியான நயத் அம்புலன்ஸை செலுத்­தி வந்திருக்கா விட்டால் சார­தி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என வைத்­தி­­யர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலியில் மனைவியை கொன்று எரித்த இலங்கையர் கைது
Next post உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை சேற்றில் புதைத்து கொலை செய்த தாயும் பாட்டியும் கைது