துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்குத் தடை
ஆளும் ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட எம்.பி துமிந்த சில்வாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை தெரிந்ததே.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ள அதேவேளை சாட்சியாளர்களை அச்சுறுத்தினால் பிணை நிராகரிக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.