கல்லூரி முதல்வர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு!!
மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வர், ஞானவரம்,60, மீது, பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில், மணிப்பூரை சேர்ந்த நாகசந்தோ மனைவி கைன்லி யுகமயில்,40, என்பவர், 2008 முதல் தங்கி படிக்கிறார். அவர், தனக்கு ஞானவரம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, புகார் செய்தார்.
ஞானவரம் மீது, 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த, எஸ்.எஸ்.காலனி போலீசார் கூறியதாவது: கல்லூரி முதல்வருக்கும், சிலருக்கும் நிர்வாக ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளது.
சில மாதங்களுக்கு முன், முதல்வர் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதற்கிடையே, கைன்லிக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகையை, விதிமுறைகளை சுட்டிக் காட்டி, ஞானவரம் ஒப்புதல்படி, கல்லூரி நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இந்த நிலையில், கல்லூரி முதல்வர் மீது, பாலியல் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.