தந்தையால் சீரழிக்கப்பட்ட இரு சிறுமிகள்: தந்தைக்கு 39 வருட கால கடூழியச் சிறை!!

Read Time:2 Minute, 8 Second

Srilanka_rapeமகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தையொருவருக்கு அனுராதபுர உயர் நீதிமன்றம் 39 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது

16 வயதுக்கும் குறைந்த இரண்டு மகள்களை மிக மோசமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சட்ட மா அதிபரினால் குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தந்திரிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்வதாக குறித்த நபர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அனுராதபுர உயர் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார ரத்நாயக்க இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த நபர் பத்தாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

தனது மூத்த மகளை மிக மோசமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக குறித்த நபர் பத்தாண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தண்டனைக் காலம் பூர்த்தியாவதற்கு முன்னதாகவே 39 ஆண்டு கால தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் மனைவி வெளிநாடு சென்றால் கணவருக்கு SMS!!
Next post இவர்களின் ஒன்றுகூடல் எதற்காக ? (PHOTOS)