புலிகள் மீதான தடையானது அவர்கள் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கல்ல.

Read Time:2 Minute, 48 Second

LTTE.band-Tiger+flag.jpgஒஸ்லோ பேச்சுகள் தோல்வியடைந்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை விடுதலைப் புலிகள் சாட்டாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்தின் இலங்கைக்கான து}துவர் எஸ்.வன் டிஜ்க் கூறியுள்ளதாவது; நாங்கள் பேச்சுகளாவது நடைபெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பேசவிரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர். எதிர்காலச் சுழ்நிலையை விடுதலைப் புலிகள் பார்க்கவில்லை. பேச்சுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றுதான் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம். இதையே விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்துக்கு தடைக்கு முன்பாகவும் தடை விதிக்கப்பட்ட பின்பாகவும் தெரிவித்துள்ளோம். இத்தடையானது டேபிள் டென்னிஸ்’ விளையாடிக் கொண்டிருப்பதற்கு அல்ல.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீடானது நீதியாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். தமிழ் மக்களின் முறைமைகளுக்கு முகம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று ஒப்புக்கொள்கிறோம். அரசாங்கம் தொடர்பான எமது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வதை இத்தடையானது தடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான தடையானது ஒப்பந்தத்தை சாகடிப்பதற்கானது அல்ல.

சமாதான முயற்சிகளுக்கான இணைத் தலைமை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா போராளிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் ஐரோப்பியத் தடையானது அப்படியானதல்ல. இருநாட்டுத் தடைகளும் வௌ;வேறு பின்புலங்களில் விதிக்கப்பட்டது. ஐரோப்பியத் தடையானது ஐ.நா. தீர்மானத்தின் கீழானது. நிதி உதவியை மட்டுமே தடை செய்கிறது. சாதகமான செயற்பாடுகளைத் தடுக்காது.

கண்காணிப்புக் குழுவினர் ஆதரவுடன் உதவிகளுக்கான பேச்சுகள் தொடரவேண்டும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் 2பேர் சுட்டுக்கொலை
Next post விமான நிலைய அதிகாரிகள் வழமைக்கு மாறாகத் தாமதப்படுத்தி சோதனை நடத்தியதானது… சு.ப.