By 19 July 2013 0 Comments

யூடியூப்பில் தனுஷ், சிம்புவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்..!!

12341069372_421468857969324_1277139163_nஎதிர்நீச்சல் படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்காக அண்மையில் சிவகார்த்திகேயன் பாடலொன்றைப் பாடினார்.

இப்போது அந்தப் பாடல் யூடியூப்பில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன்.

 ‘ஊரைக் காக்க உண்டான சங்கம்… உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை…இது இல்லை…. நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை’….. இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல். ஏற்கெனவே தனுஷ், கொலவெறி பாடலையும் சிம்பு, லவ் அந்தத்தினையும் வெளியிட்டு வரவேற்பினைப் பெற்றனர். இது சிவகார்த்தியேனின் முறை.



Post a Comment

Protected by WP Anti Spam