முள்ளிவாய்க்காலில் நிற்கும் ஜோர்தான் கப்பலை உடைக்கும் பணி ஆரம்பம்..!!

Read Time:2 Minute, 9 Second

download (25)முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடலில் நிற்கும் ஜோர்தான் நாட்டு கப்பலை உடைத்து அகற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானம் நிலவிய காலப்பகுதியில் 2005 ஆம் ஆண்டு புலிகளால் இந்தக் கப்பல் மீட்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு அரிசி ஏற்றிக் கொண்டு சென்ற சமயத்தில் நடுக்கடலில் நின்ற இக் கப்பல் 36 மாலுமிகளுடன் புலிகளால் மீட்கப்பட்டது.

கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் புலிகளின் சமாதான செயலகத்தினால்  அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் யுத்தம் ஆரம்பித்த பின்னர் யுத்தத்தில் சேதமடைந்த இக் கப்பல் இறுதியுத்தம் நடந்த முள்ளிவாய்க்காலில் நிற்கிறது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இக்கப்பலை பார்வையிடுவதற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில் இக் கப்பலை உடைத்து அகற்றுவதற்காக தனியார் ஒருவரிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதையடுத்து கப்பலை உடைத்து அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பமாகியுள்ளது. கப்பலை உடைக்கும் நடவடிக்கைகளுக்காக சுற்றுலா பயணிகள் அந்த இடத்துக்கு செல்லாது தடுக்கப்படுகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினருடன் நெருங்கியவர்கள் மட்டும் கப்பல் உடைக்கப்படுவதை பார்ப்பதற்காக அனுமதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வல்லுறவுகளுக்காக 1000 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் தற்கொலை..!!
Next post வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயம்..!!