மிக அழ­கான சேவ­லொன்று 7,500 சவூதி ரியால்­க­ளுக்கு ஏலத்தில் விற்­பனை..!!

Read Time:2 Minute, 13 Second

2450chick-5சவூதி அரே­பி­யாவில் மிக அழ­கான சேவ­லொன்று 7,500 சவூதி ரியால்­க­ளுக்கு ஏலத்தில் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது.

வளை­கு­டாவின் மிகப்­பெ­ரிய நாடான சவூதி அரே­பி­யாவில் ஏற்­கெ­னவே குதி­ரைகள், ஒட்­ட­கங்கள், ஆடுகள் மற்றும் பருந்­து­க­ளுக்­கான அழகுப் போட்­டிகள் நடை­பெற்­றுள்­ளன. ஆனால் முதற்­த­ட­வை­யாக கோழிகள் சம்­பந்­த­மான அழ­குப்­போட்­டி­யொன்று தலை­நகர் ரியாத் அரு­கி­லுள்ள ஒரு பண்­ணையில் அண்­மையில் நடை­பெற்­றது.

சவூதி அரே­பிய முடாப் அல் ஒத்மன் என்ற விவ­சாயி கடந்த வெள்­ளிக்­கி­ழமை தனது பண்ணை வீட்டில் இப்­போட்­டியை ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

இந்த போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்­காக அழ­கான கோழிகள், சேவல்­க­ளுடன் 500 இற்கும் மேற்­பட்ட விவ­சா­யிகள், வர்த்­த­கர்கள் பங்­கு­பற்றினர்.

இந்த நிகழ்ச்­சியில் பங்­கு­பற்­றி­ய­வர்கள் எண்­ணிக்கை எதிர்­பார்த்­த­தை­விட அதி­க­மாக இருந்­த­தாக அல் ஒத்மன் தெரி­வித்தார்.

“சேவ­லுக்­கான ஏலத்தில் 7,500 (சுமார் ௨௬௨,௦௦௦ ருபா )சவூதி ரியால்­க­ளுக்கு ஏலத்தில் விற்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் பங்­கேற்ற சிலர் தமது கோழி­களை விற்­பனை செய்ய விரும்­பா­ததால் ஏலத்தில் பங்­கு­பற்­ற­வில்லை. ஆனால் கோழிகள், சேவல்­க­ளுக்­கான அழகுப் போட்­டியில் மாத்­திரம் அவர்கள் கலந்து கொண்­டார்கள்” என அல் ஒத்மன் கூறினார்.

ஆனால் அப்­போட்­டியில் வெற்றி பெற்ற சேவல் எது என்பதையும் அது எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள்..!!
Next post 15 வயதான சிறுமியை ஒன்பது நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!!