கெலம் மெக்கரேவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிட்ட செனல்-4 நிறுவனத்தின் விவரணப் படங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் கெலம் மெக்கரேவுக்கு விசா வழங்க இந்தியா மறுத்துள்ளது.
புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா தொடர்பாக கெலம் மெக்கரே வெளியிட்டுள்ள காணொளி சர்வதேசம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பான புதிய விவரணப் படம் ஒன்றுக்காக புதுடில்லிக்கு அவர் வருகை தரவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கெலம் மெக்கரே கருத்து தெரிவிக்கையில்,
‘நவம்பர் மாதம் 6ஆம் திகதி டில்லிக்கு பயணமாகுவதற்கு உத்தேசித்திருந்தேன். இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பான ஆவணப்படம் ஒன்றை அங்கு படமாக்க திட்டமிட்டிருந்தேன். எனினும் எனக்கு இதுவரை விசா கிடைக்கவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating