அழகிப் போட்டியில் லஞ்சம் சர்ச்சை
Read Time:1 Minute, 22 Second
பிரேசில் நாட்டில் ‘பூம் பூம்’ அழகிப் போட்டி பிரபலம். பெரிய இடுப்பு கொண்ட பெண்ணை தேர்வு செய்து அழகிப் பட்டம் வழங்குகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த அழகிப் போட்டியில் 42 அங்குலம் இடுப்பு அளவுள்ள 25 வயது மாடல் அழகி பட்டத்தை வென்றார். அவர் கிரீடம் சூட்டிய சிறிதுநேரத்திற்குள்ளாகவே இது பெரும் சர்ச்சைக்கும் வித்திட்டு விட்டது.
அதாவது அழகிப் பட்டம் வென்ற மாடல் அழகியும், 2–வது இடத்தை பெற்ற அழகியும் சேர்ந்து, நடுவர்களுக்கு லஞ்சம் கொடுத்து பட்டத்தை தட்டி சென்று விட்டார்கள் என்பதே இந்த குற்றச்சாட்டு ஆகும். ஆனால் போட்டி குழுவினர் அதை மறுக்கிறார்கள்.
அதுபோல அழகிப்பட்டம் வென்ற மாடல் அழகி கூறுகையில், ‘நான் எவ்வித குறுக்கு வேலையிலும் ஈடுபடவில்லை. போட்டி சரியான வழியில் நடந்து தகுதி அடிப்படியில் நான் தேர்வு பெற்றேன்’ என சாதிக்கிறார்.
Average Rating