நவீன உலகின் ரோமியோ ஜுலியட்டாக மாறிய சவூதி காதலியும், எமன் காதலனும்

Read Time:2 Minute, 52 Second

3113Saudiசவூதி அரேபியாவைச் சோந்த பெண்ணொருவர் தனது குடும்பம் மற்றும் அவரது சமூக விதிமுறைகளை மீறி எமன் நாட்டைச் சேர்ந்த தனது காதலுடன் திருமணம் செய்து எமனில் வாழ அனுமதியளிக்குமாறு எமன் நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஹதா அல் நிரன் என்ற 22 வயதான இளம் பெண்ணொருவரே தனது காதலனான எமன் நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய அரபாத் மொஹம்மட் தஹார் என்பவரை மணமுடிக்கவே இவ்வாறு அனுமதி நாடி எமன் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.

ஷேக்ஸ்பியரின் நட்சத்திரங்களான ரோமியோ ஜுலியட்டை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ள இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

சவூதி அரேபியாவில் கையடக்க தொலைபேசி கடை ஒன்றில் அரபாத் வேலை செய்யும் போதே இந்த ஜோடி இடையே காதல் மலர்ந்துள்ளது.

பின்னர் நாடு திரும்பிய அரபாத்தை மணமுடிக்க குடும்பம், சமூகம் மட்டுமன்றி நாடு என பல தடைகளை மீறி சட்டவிரோதமாக எமனுக்கு சென்றுள்ளார் {ஹதா. இதனால் மீண்டும் சவூதி திரும்பினால் ஆபத்து ஏற்படக் கூடும் என {ஹதா அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் {ஹதா விடயத்தில் எதுவிதமான முடிவுகளையும் எடுக்கவில்லை. டிசெம்பர் 1ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இக்காதல் விவகாரமறிந்த பலர் {ஹதாவின் காதலுக்கு ஆதரவாக நீதிமன்றுக்கு வெளியில் நின்று குடியுரிமை மற்றும் எல்லைக்கு முன்பே காதல் உள்ளதாக கோசமெழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் {ஹதாவுக்கு புகலிடம் பெற்றுக்கொடுக்க ஐ.நா. அகதிகள் நிறுவனம் உதவி புரியவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை சவூதி வெளிநாட்டு முகவரகத்தினால் வழங்கப்பட்ட சட்டத்தரணியை அழுத்தங்கள் ஏற்படுத்தலாம் என்பதால் {ஹதா மறுத்துள்ளார். ஆனால் எமனின் அரச சார்பற்ற {ஹட் எனும் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியை ஏற்றுக்கொண்டுள்ளார் {ஹதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதவாச்சி குளக்கரையிலிருந்து பெண் சடலமாக மீட்பு
Next post மாணவியுடன் இரவைக் கழித்த, கணனி பாட ஆசிரியரை, மரத்தில் கட்டி வைத்த மக்கள்