எஞ்சியிருக்கும் ‘ஆவா’ குழுவினரை கைது செய்ய தீவிர நடவடிக்கை

Read Time:3 Minute, 12 Second

aavaaவடக்கில் பல்வேறு பகுதிகளில் எஞ்சியிருக்கும் ‘ஆவா’ குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, அதற்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொசான் டயஸ் தெரிவித்துள்ளார்.

முப்பது வருட கால யுத்தத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலை குழப்பி மக்களை அச்சமடையச் செய்யும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் செயற்பட்டுவரும் ‘ஆவா’ குழு பற்றி கருத்து கேட்ட போதே அவர் இதனை தெரிவித்ததுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் பல பகுதிகளில் இந்த ‘ஆவா’ குழு திட்டமிட்டு பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டு வந்துள்ளது.

இதற்கு முன்னர் அக்குழுவின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர்கள் இவ்வாறான திட்டமிட்ட குழுவாக செயற்பட்டுவந்தமை கண்டறியப்படவில்லை.

எனவே, அவர்கள் மிகவும் தந்திரோபாயமாக இந்தக் குற்றச் செயல்களை புரிந்து வந்துள்ளனர்.

அச்சுறுத்தி கப்பம் பெறல் கொள்ளையிடுதல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மேலும் குற்றச் செயல்களை மேற்கொள்ளல் போன்றவையே இவர்களின் செயற்பாடுகளாகும்.

‘ஆவா’ குழு என்பது ஒரு பாதாள உலக குழுவாகும். இக்குழுவில் 13 உறுப்பினர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டார்கள்.

அத்தோடு அவர்களிடமிருந்து கத்திகள், பெரிய வாள்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கைக் குண்டுகள் போன்றனவும் மீட்க்கப்பட்டன.

அத்தோடு அவ்ரகளிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் அக்குழுவைச் சேர்ந்த மேலும் பலர் தலைமறைவாகி இருக்கின்றமை தெரியவந்தது.

இக்குழுவானது சுமார் 3 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வந்துள்ளது. எனவே, இந்தக் குழுவில் ஏனைய உறுப்பினர்களை கைது செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.

எனவே இந்த கடமையினை செய்வதற்கு பொது மக்கள் முன்வர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி, குளிருக்குப் பயந்து சரண்
Next post மனம் திறந்தார் நீது சந்திரா (அவ்வப்போது கிளாமர்)