11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை

Read Time:2 Minute, 18 Second

37951சீனாவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் பெண்களுக்காக ஒரு சோடி உள்ளாடையை முழுக்க முழுக்க தங்கத்தினால் உருவாக்கியுள்ளார்.

சுமார் 11 கோடி ரூபாக விலைமதிப்புமிக்க இந்த டூ பீஸ் உள்ளாடை 3 கிலோ கிரோம் தங்கத்தினைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உயர்தர வடிவமைப்பு விற்பனைக்காக வடிவமைக்கப்படவில்லை.

இந்த உள்ளாடையை மத்திய சீனாவில் {ஹபேய் மாகாணத்தின் வுஹான் நகரிலுள்ள கோல்ட் ஸ்மித் நிறுவனத்தினால் சுமார் 6 மாதங்கள் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த நிறுவனம் சுமார் 5 மில்லியன் யுவான்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உள்ளாடையை நேற்று முன்தினம் மொடல் ஒருவர் அணிந்து கொண்டு கோல்ட்ஸ்மித் காட்சியறையில் கவர்ச்சிகரமாக வலம்வந்து காட்சிப்படுத்தியுள்ளார்.

அன்றைய நாள் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த டூ பீஸ் மற்றும் மொடலினை பலரும் தங்களது தொலைபேசியினூடாக புகைப்படம் எடுத்துள்ளனர்.

முழுமையாக தங்கத்தினால் ஆடை வடிவமைக்கப்படுவது இது முதற் தடவையல்ல. கடந்த வாரம் துருக்கி நகை வடிவமைப்பாளர் அஹ்மட் அடகான் என்பவர் முழுமையாக தங்கத்தினால் கவர்ச்சிகரமான ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வடைகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி சுமார் 1.8 கோடி ரூபா ஆகும்.

தலைசுற்றும் வகையில் விலை அமைந்திருந்தாலும் ஏற்கனவே இத்தகைய 8 தங்க ஆடைகள் விற்றுத் தீர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பளத்தை உயர்த்திய லட்சுமி மேனன்!
Next post அளவுக்கதிகமான குடியால் மரணத்தின் விளிம்பிலிருக்கும் பெண்: எச்சரிக்கைக்காக அதிர்ச்சிப் படங்களை வெளியிட்ட காதலன்