15 நிமிடத்தில் 40 பிளேட் நூடுல்ஸ் சாப்பிட்டு சாப்பாட்டு ராமன் பட்டம் வென்ற சீனர்
மத்திய சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியூயங் என்ற இடத்தில் குங்பூ பள்ளியில் ‘நூடுல்ஸ்’ சாப்பிடும் போட்டி நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த பான்யிஷ்காங் (45) என்பவரும் பங்கேற்றார். போட்டி தொடங்கியதும் அனைவரும் மிக ஆர்வத்துடன் ‘நூடுல்ஸ்’ சாப்பிட தொடங்கினர்.
ஆனால், போட்டி தொடங்கிய 15 நிமிடத்தில் பான் 40 பிளேட் ‘நூடுல்ஸ்’ சாப்பிட்டு முடித்தார். எனவே, அவர் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அவருக்கு சீனாவின் ‘மிகப் பெரிய வயிற்றுக்காரர்’ அதாவது நமது ஊரின் ‘சாப்பாட்டு ராமன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் அவர் 25 பிளேட் ‘நூடுல்ஸ்’ சாப்பிட தொடங்கும் போது போட்டியில் அவருக்கு எதிர்ப்பாளர் யாரும் இல்லை. எனவே போட்டியை முடித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பான் ஒத்துக்கொள்ளவில்லை. நான் தொடர்ந்து சாப்பிடுகிறேன் என கூறி 15 நிமிடத்தில் 40 பிளேட் ‘நூடுல்ஸ்’ சாப்பிட்டு முடித்தார்.
Average Rating