கடலில் மூழ்கி அக்காவும், தம்பியும் மாயம்
வத்தளை பொலிஸ் பிரிவில் ப்ரீதிபுர கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தம்பியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களின் விபரம் வருமாறு,
01.ரஷ்னி சமனலி – 20 வயது (அக்கா)
02.ரஷ்மிக நவீன் பெரேரா 0 12 வயது (தம்பி)
வத்தளை பொலிஸார் மற்றும் கடற்படையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.