2 1ஃ4 அடி உயர குள்ள மனிதர்..

Read Time:1 Minute, 26 Second

4484aef4-4716-4a14-b48c-38b94706fbb4_S_secvpfகொலம்பியா நாட்டு தலைநகர் போகோதாவில் எட்வர்டு ஹெர்னான்டஸ்(28) என்ற அதிசய மனிதர் வசிக்கிறார். என்ன விசேஷம் என்றால் இவருடைய உயரம் 2 அடி (27 அங்குலம்) மட்டுமே. குழந்தைகள் அணியக்கூடிய உடைகளே இவருக்கு பொருந்தும்.

முன்பின் அறியாதவர்கள் இவரை பார்த்ததும் பொம்மை என்றே நினைப்பார்கள். இவரின் அன்றாட தேவைக்கு, இளைய சகோதரர் தான் எப்போது உதவிக்கரமாக இருக்கிறார். இந்த குள்ள மனிதருக்கும் ஓர் பெரிய கனவு இருக்கிறது.

சொந்தமாக பண்ணை, காதலி இருக்க வேண்டும். அதோடு ‘ஜீப்’பை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்பதேயாகும். இவை ஒருபுறம் இருந்தாலும் உலகிலேயே மிகச்சிறிய குள்ள மனிதர் என்ற கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

சீனாவில் வசித்த பிங்பிங் என்பவரே இந்த சாதனைக்குரியவராக இருந்தார். அவர் மரணம் அடைந்த பிறகு எட்வர்டு சாதனை மனிதராக தேர்வாகி விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை
Next post சிறுவர் துஷ்பிரயோகம்; சிறுவர் நிலைய ஊழியர் கைது