மடியில் ஒருநாள் குழந்தையுடன் பிளஸ் – ஒன் தேர்வு எழுதிய பெண்

Read Time:2 Minute, 32 Second

childகொல்கத்தாவைச் சேர்ந்த மொனிரா பீவி (21) என்ற பெண், குழந்தை பெற்றடுத்த மறுநாளே தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் வைத்து பிளஸ் – ஒன் தேர்வு எழுதியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொனிரா பீவி அங்குள்ள எம்.எம். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். படித்துக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு திருமணமாகிவிட்டது. எனினும், படிப்பில் மொனிராவுக்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவளது கணவர் படிப்பை தொடர உதவினார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மொனிரா கருவுற்றதால் அடுத்த ஆண்டு படிப்பை தொடருமாறு அறிவுறுத்தினார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட மொனிரா பீவி, இந்த ஆண்டே படிப்பை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர்களும் உயர்கல்வி கவுன்சிலில் அந்த வேண்டுகோளை பதிவு செய்தனர். இதையடுத்து மொனிரா வீட்டிலிருந்தே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அவரும் எந்த சிரமும் இல்லாமல் அனைத்து பாடங்களின் தேர்வையும் எழுதினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அரசியல் அறிவியல் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தபோது பிரசவ வலி எடுத்துள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அன்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் மருத்துவமனையிலேயே அரசியல் அறிவியல் தேர்வை எழுதினார்.

தனது மனைவி குறித்து மிகவும் பெருமைப்படுவதாக அவரது கணவர் கூறினார்.

இதேபோன்று சென்ற மாதம் 24 ம் தேதி ருக்சனா பீவி என்ற பெண், குழந்தை பெற்றெடுத்த 12 மணி நேரத்தில் தேர்வு எழுதியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பு கடித்து ‘செத்தவர்’ 11 ஆண்டுக்குப் பின் திரும்பினார்; தனது தம்பியை மணந்து கொண்ட மனைவியைக் கண்டு அதிர்ச்சி!
Next post தேர்தல் பிரசாரம் செய்ய, குஷ்புக்கு தடையா?