அதிகரிக்கும் உடல் எடை – குளிர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!!

Read Time:2 Minute, 58 Second

2014049525450மக்களிடையே அதிகரித்துவரும் உடல்பருமன் மெக்சிகோ அரசிற்கு இப்போது தலையாய பிரச்சினையாக உள்ளது.

அந்நாட்டு மக்களில் பெரியவர்களில் 70 சதவிகிதத்தினரும், சிறியவர்களில் 30 சதவிகிதத்தினரும் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று அரசு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஏற்படக்கூடும் நேரடியான அல்லது மறைமுகமான பிரச்சினைகளினால் பொது சுகாதார அமைப்பிற்கான செலவினங்கள் வரும் 2017-ம் ஆண்டில் 11. 7 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கக்கூடும் என்று அரசாங்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

மெக்சிகோவில் குளிர்பானங்களின் விற்பனை தனி நபர் ஒருவரின் வருட நுகர்வோர் அளவு 163 லிட்டர் என்ற அளவில் அதிகமாகக் காணப்படுகின்றது.

மெக்சிகன் உணவு வகைகளிலும் பொறித்த உணவுகளே பிரதானமாக இருக்கின்றன. இதுமட்டுமின்றி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பில் ஒருங்கிணைந்து செயல்படும் 34 நாடுகளில் மெக்சிகோவில்தான் நீரிழிவு நோய்த்தாக்கம் அதிகமாக உள்ளது.

பெருகிவரும் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் விதமாக உயர் கலோரி குளிர்பானங்கள் மற்றும் உணவுகள் மீதான வரி விதிப்பை மெக்சிகோ அரசு சென்ற வருடம் அதிகரித்தது.

இப்போது தொலைக்காட்சி விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் முடிவை அந்நாட்டு அரசு நேற்று அறிவித்துள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவினால் வார நாட்களில் தினம் மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையிலும், வார விடுமுறை தினங்களில் காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் இத்தகைய விளம்பரங்கள் ஒலி, ஒளிபரப்பப்படுவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகளிலும் குளிர்பான விளம்பரங்கள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய உணவு மற்றும் குளிர்பானங்கள் மீது வெளிவரும் விளம்பரங்களில் 40 சதவிகிதம் விளம்பரங்கள் நிறுத்தப்படும் என்று மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருணை கொலையை சட்டபூர்வமாக்க எதிர்ப்பு!!
Next post பெண்ணை காரோடு கடத்தி நாசம் செய்த அரசியல்வாதி மகன்!!